ஜூன் முழுவதும் மிதவெப்ப, ஈரப்பத பருவநிலை நிலவும்

சிங்கப்பூரில் இந்த மாதம் முழுவதும் மிதவெப்ப, ஈரப்பத பருவ நிலை தொடரும். பெரும்பாலான நாட்களில் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

இத்தகைய பருவநிலையே இந்த மாத முன் பகுதியில் பெரும்பாலும் நிலவியது. இப்போதைய தென் மேற்கு பருவமழை நிலவரங்கள் காரணமாக வலுக் குறைந்த காற்று தென்கிழக்கில் இருந்து தென் மேற்கு நோக்கி வீசும் என எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் சில நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இருந்தாலும் சிங்கப்பூரின் பெரும் பகுதிகளில் முழு மாதத்திற்குமான மழை அளவு வழக்கமான அளவைவிட குறைவாகவே இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது. சில நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்தாலும் அது அங்குமிங்குமாக கொஞ்ச நேரம்தான் நீடிக்கும். பெரும்பாலும் காலை பின் நேரத்திலும் பிற்பகல் முன் நேரத்திலும் இடியுடன் மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது.

நிலப்பகுதியில் பகல் நேரத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதே இதற்கான காரணம். குறிப்பாக ஓரிரு நாட்களில் அதிகாலை அல்லது காலை நேரத்தில் காற்றுடன், இடியுடன் பரவலாக மழை பெய்யக்கூடும்.

மழை இல்லாத அல்லது கொஞ்ச நேரம் மழை பெய்யக்கூடிய நாட்களில் கூடியபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

சில இரவு நேரங்களில் மிதவெப்ப, ஈரப்பத பருவநிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!