தொழிற்சாலைகளின் செயல்திறன், உற்பத்தி திறனை உயர்த்த $18 மி. ஆய்வுக்கூடம்

தொழிற்சாலைகளின் செயல்திறன், உற்பத்தி திறனை உயர்த்த $18 மி. ஆய்வுக்கூடம்

2 mins read
8ce95185-b51b-4b05-8530-825427c640ed
-

சிங்­கப்­பூ­ரில் மின்­னி­யல் உற்­பத்­தியை மேம்­ப­டுத்த 18 மில்­லி­யன் வெள்ளி செல­வில் புதிய ஆய்­வுக்­கூ­டம் தொடங்­கப்­பட்­டுள்­ளது.

இன்­னும் உயர்­த­ர­மான, வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு ஏது­வான பொருட்­கள் அவர்­க­ளுக்கு விரைந்து கிடைப்­ப­தற்கு இந்த ஆய்­வுக்­கூ­டம் உதவி செய்­யும்.

ஏ*ஸ்டார் எனும் அறி­வி­யல், தொழில்­நுட்ப, ஆய்வுக் கழகமும் உற்­பத்­தித் துறை மென்பொருளை உரு­வாக்­கும் ஆர்க்ஸ்­டோன் எனும் உள்­ளூர் நிறு­வ­ன­மும் இணைந்து புதிய ஆய்­வுக்­கூ­டத்தை அமைத்­துள்­ளன.

உற்­பத்­தி­யா­கும் பொருட்­கள் எவ்­வ­ளவு சுற்­றுச்­சூ­ழல் வளங்­ களைப் பயன்­ப­டுத்­து­கின்­றன என்­பதை வெளிப்­ப­டை­யா­கக் காட்­ட­வும் அந்த ஆய்­வுக்­கூ­டம் உத­வும்.

மின்­னி­யல் உற்­பத்­தி­யில் தொழிற்­சா­லை­க­ளின் உற்­பத்­தித் திற­னை­யும் செயல்­தி­ற­னை­யும் உயர்த்­த­வும் மனி­தத் தவ­று­க­ளைக் குறைக்­க­வும் மின்­னி­யல் உற்­பத்தி பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

ஆய்­வுக்­கூ­டத்­தின் திறப்­பு­ விழா­வில் பேசிய வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங், சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் வளர்ச்­சி­யில் உற்­பத்தித் துறை முக்­கிய பங்கு வகிப்­ப­தா­கக் கூறி­னார்.

சென்ற ஆண்டு முதல் காலாண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இவ்­வாண்டு முதல் காலாண்­டில் உற்­பத்­தித் துறை 7.5% வளர்ச்சி கண்­டது.

மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்­சி­யில் காணப்­பட்ட 0.2% வளர்ச்­சியை விட இது வெகு அதி­கம்.

"செல­வைக் குறைத்­துப் போட்டி ­யி­டா­மல், அறி­வு­சார் சொத்­து­ரிமை, நிபு­ணத்­து­வம், திறன்­கள் போன்­ற­வற்­றைக் கொண்டு போட்­டி­யி­டும் உயர் மதிப்பு உற்பத்­தியை நோக்கி சிங்­கப்­பூரை நகர்த்­து­வது இலக்கு," என்று திரு கான் கூறி­னார்.

உள்­நாட்­டில் உரு­வான நிபு­ணத்­து­வ­மும் அறி­வுத்­தி­ற­னும் இருக்­கும் உள்­ளூர் உற்­பத்தி நிறு­வனங்­க­ளைக் கொண்ட வலு­வான அடித் ­த­ளம் நாட்­டுக்­குத் தேவை என்­றார் அவர்.

அப்­போதுதான் காலத்­துக்கு ஏற்ப இருக்­க­வும் மீட்­சித்­தி­றன் உள்ள வளர்ச்­சியை உரு­வாக்­க­வும் சிங்­கப்­பூ­ரால் முடி­யும் என்று அமைச்சர் கான் தெரி­வித்­தார்.