112 காற்பந்து திடல் அளவு பெரிதான சூரிய சக்தி ஆலை

112 காற்பந்து திடல் அளவு பெரிதான சூரிய சக்தி ஆலை

2 mins read
346ea980-9108-4c54-82a0-92b6790cac63
செமாக்­காவ் தீவில் திட்டமிடப்படும் சூரிய சக்தி ஆலை­யில் 17,500 வீடு­க­ளுக்கு எரி­சக்­தியை வழங்கும் ஆற்­றலை உருவாக்குவது திட்டத்தின் நோக்கம். படம்: தேசிய சுற்றுப்புற வாரியம் -

செமாக்­காவ் தீவில் 112 காற்­பந்­துத் திடல்­கள் அள­வுக்­கு பெரிய சூரிய சக்தி ஆலையை அமைக்­கத் திட்­ட­மிட்­டுப்­பட்டு வரு­கிறது.

அதன் தொடர்­பில் ஜேடிசி அமைப்­பும் ஷெல் நிறு­வ­ன­மும் நேற்று இரு­த­ரப்­பை­யும் கட்­டுப்­ப­டுத்­தாத புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டன.

சூரிய சக்தி ஆலைக்­கான திட்­டம் இன்­னும் ஆரம்­பக் கட்­டத்­தில் உள்­ளது. திட்­டத்­துக்கு எரி­சக்தி சந்தை ஆணை­ய­மும் தேசிய சுற்­றுப்­புற வாரியமும் ஆத­ரவு அளித்­துள்­ளன.

முழுமை பெற்­றால், இவ்­வாண்டு முற்­ப­கு­தி­யில் அறி­விக்­கப்­பட்ட தெங்கா நீர்­தேக்க சூரிய சக்தி ஆலை­யை­விட இது இரண்டு மடங்­குக்கு மேல் பெரி­தாக இருக்­கும். அதை­விட இந்த செமாக்­காவ் ஆலை கூடு­தல் சூரிய சக்­தி­யை­உற்­பத்தி செய்­யும் என்று கூறப்­பட்­டது.

செமாக்­காவ் ஆலை­யில் 72 மெகா­வாட்-பீக் (MWp) அள­வுக்கு எரி்சக்­தியை உற்­பத்தி செய்­யத் திட்­ட­மி­டப்பட்டுள்ளது. அது 17,500 வீடு ­க­ளுக்கு எரி­சக்­தியை வழங்­கும் ஆற்­றல் பெற்­றது.

வரும் 2025க்குள் 260,000 இல்­லங்­க­ளுக்­குத் தேவை­யான சூரிய சக்­தியை உற்­பத்தி செய்­யும் சிங்­கப்­பூ­ரின் இலக்கை அடைய இந்­தத் திட்­டம் உத­வும் என எதிர்­பார்க்­கப் படு­கிறது.

செமாக்­காவ் தீவில்­ மட்­டும்தான் சிங்­கப்­பூ­ரில் குப்பை எரிக்கப்பட்ட சாம்பல் நிரப்­பப்­பட்டு வரு­கிறது. அந்த நடவடிக்கை தொடரும்.

அத்­து­டன் செமாக்­காவ் தீவில் உள்­கட்­ட­மைப்­பும் போக்­கு­வ­ரத்து வச­தி­யும் குறை­வாக இருப்­பது திட்­டத்­துக்­கான சவால்­கள் ஆகும். இது­போன்ற சூழ­லில் இவ்­வ­ளவு பெரிய சூரிய சக்தி ஆலை திட்­ட­மி­டப்­ப­டு­வது இதுவே முதல் முறை.

செமாக்­காவ் தீவு ஆலை, கரி­ய­மில வெளி­யேற்­றத்தை ஆண்­டுக்கு 37,000 டன் அள­வுக்­குக் குறைக்க உத­வும் என்று திட்­டத்­தில் பங்கு­ வ­கிக்­கும் ஜேடிசி, ஷெல் நிறுவனம் உள்ளிட்ட நான்கு அமைப்புகளும் தெரிவித்தன.