எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் 8.8% கூடின

சிங்கப்பூரின் எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகள் ஏப்ரல் மாதத்தைவிட கடந்த மே மாதம் வேகமாகக் கூடின.

மின்னணுப் பொருட்களும் இயந்திரங்கள், ரசாயனம் போன்ற மின்னணு சாரா பொருட்களும் அதிகமாக ஏற்றுமதியானதே முக்கிய காரணமாக இருந்தது. இந்த ஏற்றுமதிகள் மே மாதம் 8.8% அதிகரித்தன. ஏப்ரலில் இந்த அதிகரிப்பு 6% ஆக இருந்தது.

எண்ணெய் சாராத ஊள்நாட்டு ஏற்றுமதிகள் சென்ற ஆண்டு டிசம்பர் முதல் வளர்ச்சி கண்டு வருவதாக எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது.

இந்த ஏற்றுமதிகள் மே மாதம் 16% கூடும் என்று புளூம்பர்க் நிறுவனம் நடத்திய ஆய்வில் பகுப்பாய்வாளர்கள் கணித்து இருந்தார்கள். ஆனால் இந்த அளவுக்கு அதிகரிப்பு இடம்பெறவில்லை.

மாதாந்திர சரியாக்க அடைப்படையில் பார்க்கையில், மே மாதம் எண்ணெய் சாராத ஊள்நாட்டு ஏற்றுமதிகள் 0.1% குறைந்தன. இந்தக் குறைவு ஏப்ரலில் 8.8% ஆக இருந்தது.

மின்னணு தயாரிப்புப் பொருட்கள் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் சென்ற மாதம் 11% கூடியது. ஏப்ரலில் இந்த அதிகரிப்பு 10.9% அக இருந்தது.

மின்னணு சாராத பொருட்கள் ஏற்றுமதி சென்ற ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மே மாதம் 8.1% கூடியது. இந்த அதிகரிப்பு கடந்த ஏப்ரலில் 4.7% ஆக இருந்தது.

மொத்தமாக சிங்கப்பூரின் முக்கியமான சந்தைகளுக்கான ஏற்றுமதிகள் சென்ற மாதம் கூடின. இருந்தாலும் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதிகள் குறைந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!