ஜூன் முழுவதும் மிதவெப்ப, ஈரப்பத பருவநிலை நிலவும்

ஜூன் முழுவதும் மிதவெப்ப, ஈரப்பத பருவநிலை நிலவும்

2 mins read
07ebc158-2bef-426c-97e2-3007150d24df
-

சிங்கப்பூரில் இந்த மாதம் முழுவதும் மிதவெப்ப, ஈரப்பத பருவ நிலை தொடரும். பெரும்பாலான நாட்களில் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

இத்தகைய பருவநிலையே இந்த மாத முன் பகுதியில் பெரும்பாலும் நிலவியது. இப்போதைய தென் மேற்கு பருவமழை நிலவரங்கள் காரணமாக வலுக் குறைந்த காற்று தென்கிழக்கில் இருந்து தென் மேற்கு நோக்கி வீசும் என எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் சில நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இருந்தாலும் சிங்கப்பூரின் பெரும் பகுதிகளில் முழு மாதத்திற்குமான மழை அளவு வழக்கமான அளவைவிட குறைவாகவே இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது. சில நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்தாலும் அது அங்குமிங்குமாக கொஞ்ச நேரம் தான் நீடிக்கும். பெரும்பாலும் காலை பின் நேரத்தலும் பிற்பகல் முன் நேரத்திலும் இடியுடன் மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது.

நிலப்பகுதியில் பகல் நேரத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதே இதற்கான காரணம். குறிப்பாக ஓரிரு நாட்களில் அதிகாலை அல்லது காலை நேரத்தில் காற்றுடன், இடியுடன் பரவலாக மழை பெய்யக்கூடும்.

மழை இல்லாத அல்லது கொஞ்ச நேரம் மழை பெய்யக்கூடிய நாட்களில் கூடியபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

சில இரவு நேரங்களில் மிதவெப்ப, ஈரப்பத பருவநிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.