‘வரிசையில் காத்திருப்பதும் கிருமி பரவலுக்குக் காரணமாகலாம்’

புக்­கிட் மேரா வியூ சந்தை மற்­றும் உணவு நிலை­யத்­தில் கொவிட்-19 கிரு­மிப் பர­வல் ஏற்­பட்­ட­தற்­குப் பல அம்­சங்­கள் கார­ண­மாக இருக்­கலாம். இருப்­பி­னும் குறிப்­பிட்டு எது கார­ணம் என்­பதை இன்­னும் உறுதி­செய்­ய­வில்லை என்று கொள்­ளை­நோய் தொடர்­பில் இயங்­கி­வரும் அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு நேற்று தெரி­வித்­தது.

நிலை­யத்­தில் கழி­வறை போன்று பொது­வா­கப் பயன்­ப­டுத்­தப்­படும் வச­தி­கள் தொற்­றுப் பர­வலுக்­குக் கார­ண­மாக இருக்­கலாம் என்று கூறப்­பட்­டது.

பிர­ப­ல­மான கடை­களில் அரை மணி நேரம் அல்­லது அதற்­கும் மேல் நீண்ட வரி­சை­யில் மக்­கள் காத்­தி­ருப்­ப­தும் கார­ண­மாக இருக்­க­லாம் என்­றார் மருத்­து­வச் சேவைத் துறை இயக்­கு­ந­ரான இணைப் பேரா­சி­ரி­யர் கென்­னத் மாக்.

புக்­கிட் மேரா வியூ கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­தில் நேற்­றைய நில­வ­ரப்­படி 56 சம்­ப­வங்­கள் பதி­வா­கி­விட்­டதை அவர் குறிப்­பிட்­டார். பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 21 பேர் கடைக்­கா­ரர்­கள், சந்­தைக்கோ உணவு நிலை­யத்­திற்கோ வரு­கை­ய­ளித்­த­வர்­கள் 13 பேர் ஆவர். எஞ்­சி­ய­வர்­க­ளுக்கு உணவு நிலை­யம் சென்­ற­வர்­க­ளி­ட­மி­ருந்து தொற்று பர­வி­யுள்­ளது என்­றார் பேரா­சி­ரி­யர் மாக்.

இதற்­கி­டையே, புக்­கிட் மேரா வியூ சந்­தைக்கு அரு­கில் ஏற்­பட்­டுள்ள இதர கொவிட்-19 குழு­மங்­களை சுகா­தார அமைச்சு ஆராய்ந்து வரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார். அவற்­றுக்­கும் புக்­கிட் மேரா வியூ கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­திற்­கும் தொடர்பு உள்­ளதா என்­ப­தைக் கண்­ட­றி­யும் பணி நடந்து வரு­கிறது.

கிரு­மிப் பர­வ­லுக்­கான கார­ணத்­தைக் கண்­ட­றிந்­த­தும் சுகா­தார அமைச்சு அதன் கண்­டு­பிடிப்­பு­களை வெளி­யி­டும் என்று கூறப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!