கொவிட்-19 நோயாளிகள் போன இடங்களுக்கு சென்றிருந்தால் கட்டாய கொவிட்-19 பரிசோதனை

கொவிட்-19 நோயாளிகள் போன இடங்களுக்கு சென்றிருந்தால் கட்டாய கொவிட்-19 பரிசோதனை

1 mins read
76f19dc0-085e-439b-8f07-870d2a7d5354
-

கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் சென்­றி­ருந்த அதே இடங்­க­ளுக்கு அன்­றைய தினம் போன­வர்­க­ளுக்கு கொவிட்-19 பரி­சோ­தனை கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு சென்­ற­வர்­கள் அடை­யா­ளம் காணப்­பட்­ட­பின், சுகா­தார எச்­ச­ரிக்கை விடுக்­கும் வகை­யில் சுகா­தார அமைச்சு குறுஞ்­செய்தி அனுப்­பும். குறிப்­பி­டப்­பட்ட பரி­சோ­தனை நிலை­யங்­க­ளுக்­குச் சென்று அவர்­கள் கட்­டாய கொவிட்-19 பரி­சோ­த­னை­யைச் செய்­து­கொள்ள வேண்­டும்.

பரி­சோ­தனை முடி­வு­கள் தெரி­விக்­கப்­ப­டும்­வரை அவர்­கள் தொடர்ந்து தங்­க­ளைத் தனி­மைப்­படுத்­திக்­கொள்ள வேண்­டும் என்று நேற்று நடந்த செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் கொவிட்-19 தொடர்­பான அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு தெரி­வித்­தது.

கிருமி தொற்­றும் ஆற்­றல் அதி­கரித்­துள்ள நிலை­யில் 'டிரேஸ்­டு­கெ­தர்', 'சேஃப்எண்ட்ரி' தர­வு­க­ளைப் பயன்­ப­டுத்­தித் தொற்­றுச் சம்­ப­வங்­களைக் கண்­ட­றி­யும் பணி­க­ளைத் தீவி­ர­மாக்­கி­னால் பெரும் கிரு­மித்­தொற்­றுக் குழு­மங்­கள் உரு­வா­வதைத் தடுக்க முடி­யும் என அமைச்சு தெரி­வித்­தது. பரி­சோ­த­னை­யில் தொற்று இல்லை என்று உறு­தி­யா­னா­லும் பிற­ரு­டன் தொடர்­பில் இருப்­ப­தைத் தொடர்ந்து கட்­டுப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்று அமைச்சு அறி­வு­றுத்­தி­யது.

பரி­சோ­தனை நிலை­யங்­களில் கொவிட்-19 சுய பரி­சோ­த­னைக் கரு­வி­களும் நபர்­க­ளுக்கு வழங்­கப்­படும். அடுத்து வரும் நாட்­களில் அவர்­கள் வீட்­டில் பரி­சோ­த­னை­யைச் செய்­து­கொண்டு தொற்று இல்லை என்­பதை உறுதி செய்­து­கொள்ள வேண்­டும்.

இதற்­கி­டையே, மக்­கள் ஓரி­டத்­தி­லி­ருந்து வெளி­யே­றும்­போ­தும் அதற்­கான பதி­வைச் சமர்ப்­பிக்­கும் வசதி ஏற்­ப­டுத்­தித் தரப்­ப­டு­கிறது. மக்­கள் நட­மாட்­டம் அதி­க­முள்ள கடைத்­தொ­கு­தி­கள், மருத்­து­வ­மனை­கள், பல­துறை மருந்­த­கங்­கள், உணவு, பானக் கடை­கள், உட­லு­று­திக் கூடங்­கள் போன்­ற­வற்­றில் இந்த வசதி இருக்­கும்.