கொவிட்-19 கட்டுப்பாடுகளை எச்சரிக்கையுடன் தளர்த்தவேண்டும்

கொவிட்-19 கட்டுப்பாடுகளை எச்சரிக்கையுடன் தளர்த்தவேண்டும்

1 mins read
1903b6ff-b479-40fa-b6b4-46000d0078b7
-

பொரு­ளி­யல், சமூக நட­வ­டிக்­கை­களை மீண்­டும் துவங்­கும்­போது எச்­ச­ரிக்­கை­யான அணு­கு­மு­றை­யைக் கையாள வேண்­டும் என்று கூறி­யுள்­ளது கொவிட்-19 தொடர்­பான அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு. இவ்­வாறு எச்­ச­ரிக்­கை­யு­டன் செயல்­ப­டும்­போது மேலும் அதி­க­மா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள அவ­கா­சம் கிடைப்­ப­தா­கக் கூறப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­காத நிலை, அல்­லது ஒன்­றி­ரண்டு சம்­ப­வங்­கள் மட்­டுமே பதி­வா­கும் நிலை வரும்­வரை காத்­தி­ருந்து கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்தி நட­வ­டிக்­கை­களை மீண்­டும் தொட­ர­லாம். ஆனால் இவ்­வாறு செயல்­பட்­டால் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் பல மாதங்­க­ளுக்கு நீடிக்­கும் நிலை ஏற்­ப­ட­லாம் என்­றார் நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங்.

ஏன், கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தி­விட்டு மீண்­டும் அவற்றை விதிக்­கும் நிலை கூட வர­லாம் என்­றார் அவர்.

தற்­போ­தைய நிலை­யில் தடுப்­பூசி போடும் பணி­களை முடுக்கி­வி­டு­வதே சிறந்த தீர்­வாக உள்­ள­தென சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் குறிப்­பிட்­டார்.

இந்­நி­லை­யில். ஆகஸ்ட் மாதத்­திற்­குள் 50% மக்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டி­ருக்­கும் என்று தடுப்­பூசி விகி­தத்­திற்­கான தம் இலக்­கைத் தெரி­வித்­தார் திரு வோங்.