சிங்கப்பூரில் தனிமை உத்தரவை நிறைவேற்றிய 29,000 பேர் தொடர்பில் நடத்தப்பட்ட உள்ளூர் ஆய்வு ஒன்றில், கொவிட்-19க்கு எதிராக 79.1% பாதுகாப்பைத் தடுப்பூசி தருவது கண்டறியப்பட்டது.
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வதால் தொற்று ஏற்படும் அபாயமும் பின்னர் அது கடுமையான நோயாக மாறும் சாத்தியமும் குறைவதாக நேற்று செய்தியாளர் கூட்டத்தின்போது சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோரும் அடங்குவர். ஏப்ரல் 11 முதல் சமூகத்தில் பதிவான கொவிட்-19 நோயாளிகளில் முழுமையாக தடுப்பூசி போடப்படாத 629 பேரில் 54 பேருக்குக் கடுமையான நோய் பாதிப்பு ஏற்பட்டது. முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட 158 பேர், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டும் அவர்களில் இருவர் மட்டுமே கடுமையான பாதிப்புக்கு ஆளாகினர்.

