சட்டவிரோதமாக நுழைந்த
இந்தோனீசியருக்கு கிருமித்தொற்று
கடல்வழி சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த
26 வயது இந்தோனீசிய ஆடவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதிசெய்யப்பட்டது. நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட 27 புதிய கிருமித்தொற்று சம்பவங்களில் அந்த ஆடவரும் அடங்குவார் என்று கூறப்பட்டது. முறையான ஆவணங்கள் ஏதுமில்லாத நிலையில் அந்த ஆடவர், சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது கரையோர போலிஸ் அதிகாரியால் கைது செய்யப்பட்டார்.
தனிமை உத்தரவில் இருந்த நண்பரை
சந்தித்தவர் மீது குற்றச்சாட்டு
ஹோட்டல் அறை ஒன்றில், தனிமை உத்தரவில் இருந்த தன் நண்பரைச் சந்தித்ததாக 20 வயது சொவ் கைசெர் என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு நவம்பர் 28 அன்று பகல் மூன்று மணியளவில் சொவ் கைசெர் அந்த நண்பரின் ஹோட்டல் அறைக்குச் சென்றதுடன் அங்கு கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஹோட்டலில் கட்டுப்பாடுகள் இருந்த நிலையிலும் மின்தூக்கி வழியாக இளையர் தன் நண்பர் இருந்த அறைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

