அரசாங்க ஆதரவு நீட்டிப்பு

அரசாங்க ஆதரவு நீட்டிப்பு

2 mins read
52700671-6eb0-4bcf-b4cd-15a8bc1557d6
உண­வங்­கா­டிக் கடைக்­கா­ரர்­கள் போன்­ற­வர்­க­ளுக்கு அர­சாங்­கம் வழங்கி வரும் ஆத­ரவு நீட்­டிக்­கப்­படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உணவு, பானக் கடைகள், உணவங்காடிக் கடைக்காரர்கள், பாதிக்கப்பட்ட இதர துறைகள்

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லால் பெரி­தும் பாதிக்­கப்­பட்ட உணவு, பானத் துறை­யி­னர், உண­வங்­கா­டிக் கடைக்­கா­ரர்­கள் போன்­ற­வர்­க­ளுக்கு அர­சாங்­கம் வழங்கி வரும் ஆத­ரவு நீட்­டிக்­கப்­படும் என்று கொவிட்-19 தொடர்­பான அமைச்­சு­கள்­நி­லைப் பணிக்­குழு நேற்று தெரி­வித்­தது.

பல்­வேறு நட­வ­டிக்­கை­களில் கடு­மை­யாக்­கப்­பட்ட பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­கள் ஜூலை மாதம் நடுப்­ப­குதி வரை நீட்­டிக்­கப்­ப­டு­கிறது என்று சுகா­தார அமைச்சு கூறி­ய­தன் தொடர்­பில் மேற்­கண்ட ஆத­ரவு நீட்­டிப்பு பற்றி தெரி­விக்­கப்­பட்­டது. வேலை ஆத­ர­வுத் திட்­டத்­தின் தற்­போ­தைய மேம்­பா­டு­கள் அடுத்த மூன்று வாரங்­க­ளுக்கு நீட்­டிக்­கப்­படும். அதற்கு அடுத்த இரண்டு வாரங்­க­ளுக்கு அந்த விகி­தம் 10 விழுக்­காட்­டுக்­குக் குறைக்­கப்­படும்.

அப்­படி என்­றால், மேம்­ப­டுத்­தப்­பட்ட பாது­காப்பு நிர்­வாக நடை­முறை­கள் உள்ள உணவு, பானத் துறை, உட­லு­று­திக் கூடங்­கள் போன்­ற­வற்­றுக்­கும் படைப்­புக் கலை­கள் மற்­றும் கலைக் கல்வி நிலை­யங்­கள் ஆகி­ய­வற்­றுக்­கும் இம்­மாதம் 21ஆம் தேதி முதல் 50% வேலை ஆத­ர­வுத் திட்­டத்­தின் வழங்கு தொகை கிடைக்­கும். அது ஜூலை 12ஆம் தேதி­யி­லி­ருந்து இரண்டு வாரங்­க­ளுக்கு 10 விழுக்­கா­டா­கக் குறைக்­கப்­படும்.

இதற்­கி­டையே, குறிப்­பி­டத்­தக்க பாதிப்­ப­டைந்த துறை­க­ளான சில்­லறை வர்த்­த­கம், திரை­ய­ரங்­கு­கள், அரும்­பொ­ரு­ள­கங்­கள், கலைக் காட்­சிக்­கூ­டங்­கள், வர­லாற்­றுத் தலங்­கள், குடும்ப கேளிக்­கைக் கூடங்­கள் போன்­ற­வற்­றுக்கு இம்­மா­தம் 21 முதல் வேலை ஆத­ர­வுத் திட்­டத்­தின் 30% வழங்­கு­தொகை கிடைக்­கும். பின்­னர் ஜூலை 12ஆம் தேதி­யி­லி­ருந்து இரண்டு வாரங்­களுக்கு 10 விழுக்­கா­டா­கக் குறைக்­கப்­படும். சுய தொழில் செய்­யும் உண­வங்­கா­டிக் கடைக்­கா­ரர்­க­ளுக்­கும் உதவி வழங்­கும் வகை­யில், மேசை­யைச் சுத்­தம் செய்­தல், ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட தட்டு கழு­வும் சேவை­கள் ஆகி­ய­வற்­றுக்­கான கட்­ட­ணத்­தில் வழங்­கப்­பட்டு வந்த கட்­ட­ணக் கழிவை அர­சாங்­கம் நீட்­டிக்­கும் என்று சுகா­தார அமைச்சு கூறி­யது.

மேலும் தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் அல்­லது வாரி­யத்­தால் நிய­மிக்­கப்­பட்ட நடத்­து­நர்­கள் நிர்­வ­கிக்­கும் உண­வங்­காடி நிலை­யங்களில் உள்ள உண­வுக் கடைக்­கா­ரர்­களுக்கு ஜூலை நடுப்­ப­குதி வரை வாட­கைக் கழிவு அளிக்­கப்­படும்.

நீட்­டிக்­கப்­பட்ட கடு­மை­யான பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­களால் பாதிக்­கப்­பட்ட இதர ஊழி­யர்­க­ளுக்கு, கொவிட்-19 மீட்­சிக்­கான தற்­கா­லிக மானி­யம் ஜூலை 31 வரை நீட்­டிக்­கப்­படும்.

தற்­போது அந்த மானி­யத்­தைப் பெற்று வரு­வோர், ஜூலை­யில் கிடைக்­கும் இரண்டாம் சுற்று ஆத­ர­வுக்கு விண்­ணப்­பிக்க வேண்­டும்.

இதன் தொடர்­பி­லான கூடு­தல் விவ­ரங்­களை சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு அளிக்­கும்.