மக்கள்தொகை கணக்கெடுப்பு காட்டும் 7 முக்கிய அம்சங்கள்

வேலை பார்க்கும் தம்பதியர் அதிகம்; வருவாய் அதிகரிப்பு; சுருங்கும் குடும்ப அளவு

சிங்கப்பூரில் 2010 முதல் 2020 வரைப்பட்ட பத்து ஆண்டுகளில் எல்லா முக்கிய இனங்களையும் சேர்ந்த குடும்பங்களின் வருவாய் அதிகரித்துள்ளது.

கணவன், மனைவி இருவரும் வேலை பார்க்கின்ற போக்கும் அதிகமாகி உள்ளது.

நாட்டின் ஆறாவது மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் மூலம் இந்த நிலவரம் தெரியவந்துள்ளது.

ஏறத்தாழ 150,000 குடும்பங்களை உள்ளடக்கி நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பு மொத்தத்தில் முக்கியமான ஏழு அம்சங்களைக் கண்டறிந்து உள்ளது.

வேலை மூலம் கிடைக்கும் சிங்கப்பூர் குடும்பங்களின் சராசரி வருவாய் 3.3% கூடி $5,600லிருந்து $7,744 ஆகி இருக்கிறது.

வேலை பார்க்கும் தம்பதியர் அதிகமாகி இருக்கிறார்கள். இருவருமே அதிகம் படித்துள்ளனர். வேலை பார்க்கும் மனைவி உள்ள தம்பதியர் விகிதம் 52.9%லிருந்து 60% ஆகி உள்ளது. கணவர் மட்டும் வேலை பார்க்கும் குடும்ப விகிதம் 32.6%லிருந்து 24.9% ஆகக் குறைந்துள்ளது.

குடும்ப உறுப்பினர் சராசரி எண்ணிக்கை 3 அல்லது அதற்கும் குறைவாக குறைந்துள்ளது.

ஒரே ஒருவரைக் கொண்ட குடும்ப விகிதம் 2020ல் 16% ஆகி யது. 65 மற்றும் அதற்கும் அதிக வயது உள்ள குறைந்தபட்சம் ஒருவரைக் கொண்ட குடும்பங்கள் 24.1% லிருந்து 34.5% ஆகின.

முதியோர் மட்டும் வசிக்கும் குடும்பங்கள் 27,900 லிருந்து 63,800 ஆக அதிகரித்தன.

குடிமக்கள், நிரந்தரவாசிகளில் கிட்டத்தட்ட 98,000 பேர் அல்லது ஐந்து மற்றும் அதற்கும் அதிக வயதுள்ளவர்களில் 2.5 விழுக்காட்டினர், சுயமாக செயல்பட முடியாமல், அவசியமான காரியங்களில் குறைந்தது ஒரு செயலையாவது செய்ய சிரமப்படுகிறார்கள் என்பது மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலம் முதன்முறையாகத் தெரிய வந்துள்ளது.

கூட்டுரிமை, இதர அடுக்குமாடி வீடுகளில் வசிக்கும் குடும்பங்களின் விகிதாச்சாரம் 2010ல் 11.5% ஆக இருந்தது. இது சென்ற ஆண்டில் 16% ஆகியது.

ஐந்து குடும்பங்களில் நான்கு குடும்பங்கள் வீவக வீடுகளில்தான் வசிக்கின்றன. நாலறை வீடுதான் பொதுவான பிரபலமான வீடாக இருக்கிறது.

வேலை என்று வரும்போது நகர மையம்தான் அனைவரையும் கவரும் பகுதியாகத் தொடர்கிறது.

ஊழியர்களில் 12.9% அல்லது ஏறத்தாழ 284,000 பேர் அப்பகுதியில் வேலை பார்க்கிறார்கள்.

இதனிடையே, வேலைக்குச் செல்வோரில் பேருந்து, ரயில் மூலம் செல்வோர் விகிதாச்சாரம் கூடி உள்ளதாகவும் மக்கள்தொகை அறிக்கை குறிப்பிடுகிறது.

காரில் வேலைக்குச் செல்வோர் விகிதம் 24.8%லிருந்து 21.1% ஆகக் குறைந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!