இரட்டை வருவாய், சரிசம கல்வித் தகுதி தம்பதியர் அதிகம்

இரட்டை வருவாய், சரிசம கல்வித் தகுதி தம்பதியர் அதிகம்

2 mins read
2cb7d5a1-64a1-4ec4-8297-a7f35ef95518
வேலை பார்க்கும் மனைவியுடன் கூடிய மணமான தம்பதி குடும்பங்கள் விகிதம் கூடியது. இது ஊழியர் அணியில் பெண்கள் ஈடுபாடு அதிகம் என்பதைக் காட்டுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் 2010 முதல் 2020 வரைப்பட்ட பத்து ஆண்டுக் காலத்தில் வேலை பார்க்கும் மனைவியர்களைக் கொண்ட குடிமக்கள், நிரந்தரவாசிகளின் குடும்பங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கணவன், மனைவி இருவரும் சரிசம கல்வித் தகுதியுடன் கூடியவர்களாக இருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளது. ஊழியர் அணியில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதை இந்தப் போக்கு காட்டுகிறது.

அதோடு, கல்வியைப் பொறுத்தவரை சரிசம வாய்ப்பு கிடைக்கிறது என்பதும் இதன் மூலம் தெரியவருவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்ட புள்ளிவிவரத் துறை தெரிவித்தது.

குடிமக்கள், நிரந்தரவாசிகள் குடும்பங்களில் வேலை பார்க்கும் மனைவியடன் கூடிய மணமான தம்பதியர் விகிதாச்சாரம் 2010ல் 52.9% ஆக இருந்தது. இது சென்ற ஆண்டில் 60.0% ஆகக் கூடியது.

கணவர் மட்டும் வேலை பார்க்கும் குடும்பங்கள் விகிதம் அதே பத்து ஆண்டுகளில் 32.6% லிருந்து 24.95% ஆகக் குறைந்தது.

கணவன், மனைவி இருவரும் வேலை பார்க்கும் தம்பதியரே, மண மான தம்பதியரில் ஆக அதிகமாக இருந்தனர். 2010ல் 47.1% ஆக இருந்த இந்த அளவு, சென்ற ஆண்டில் 52.5% ஆக அதிகரித்தது.

எல்லா வயதுப் பிரிவினரிடத்திலும் இந்த அதிகரிப்பு காணப்படுகிறது. 35 வயது முதல் 49 வரை வயதுள்ள பிரிவினரில் இந்த அதிகரிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. 65 அதற்கும் அதிக வயது தம்பதிய ரில் ஒருவர் அல்லது இருவரும் வேலை பார்ப்போர் விகிதம் கூடியது.

அதே வேளையில், இருவரும் வேலை பார்க்கும் தம்பதியர் அளவு 66.3%லிருந்து 49.4% ஆகக் குறைந்தது. முதியவர்கள் வேலை பார்க்கும் விகிதம் அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது.

வேலை பார்க்கும் மணமான தம்பதியரின் மொத்த மாத சராசரி வருவாய் $9,000 மற்றும் அதற்கும் அதிகமாக இருந்த குடும்பங்கள் விகிதம் 29.9%லிருந்து சென்ற ஆண்டில் 48% ஆக கணிசமாகக் கூடியது.