சிங்கப்பூரில் பத்து ஆண்டு களுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது அதிகமான மக்கள் ரயில், பேருந்தில் வேலைக்குச் செல்கிறார்கள். சொந்த வாகனத்தில் செல்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அதே காலத்தில், டாக்சி, வாடகை காரில் செல்லும் சிங்கப்பூர் வாசிகள் விகிதம் அதிகமாகி உள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிறது.
தொடர்பு வசதிகள் அதிக மாகி இருக்கின்றன. ரயில், பேருந்தில் வேலைக்குச் செல்வோருக்கு முன்பைவிட இப்போது அதிக நேரம் பிடிக்கிறது. வேலை பார்க்கின்ற குடிமக்கள், நிரந்தரவாசிகளில் 57.7% பேருந்து ரயில், இலகு ரயில் என்று பலவற்றிலும் செல்கிறார்கள். இந்த அளவு 2010ல் 54.6% ஆக இருந்தது.
மோட்டார்சைக்கிள், தனியார் வாடகைப் பேருந்துகள் போன்ற இதர போக்குவரத்துகளைப் பயன்படுத்தம் மக்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் குறைந்துள்ளது.
வேலைக்குச் செல்ல ரயில், பேருந்து எதுவும் தேவை இல்லை என்று ஏறத்தாழ 9.8% கூறினர். இந்த அளவு 2010ல் 7.5% ஆக இருந்தது.


