கூட்டுரிமை வீடுகளில் அதிகமானோர் வசிக்கிறார்கள்

சிங்கப்பூர் வாசிகளில் கூட்டுரிமை, இதர அடுக்குமாடி வீடுகளில் வசிப்போர் பத்தாண்டு களுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது அதிகம்.

அதே வேளையில், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்று அல்லது அதற்கும் குறைவான அளவை நோக்கிச் செல்கிறது என்று மக்கள் தொகை அறிக்கை தெரிவிக்கிறது.

புள்ளிவிவரத்துறை நேற்று அந்த அறிக்கையின் இரண்டாவது பகுதியை வெளியிட்டது. முதலாவது பகுதி கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது.

2020ல் சிங்கப்பூர் வாசிகள் குடும்பங்களின் எண்ணிக்கை 1.37 மில்லியன் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. இது 2010ல் 1.15 மில்லியனாக இருந்தது.

கூட்டுரிமை மற்றும் இதர அடுக்குமாடி வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள் விகிதம் 11.5% லிருந்து 16 விழுக்காடாகக் கூடியது. இருந்தாலும் பெரும்பாலான குடும்பங்கள், அதாவது ஐந்து குடும்பங்களில் ஏறக்குறைய நான்கு குடும்பங்கள் அல்லது 78.7% குடும்பங்கள், வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்கு மாடி வீடுகளில் வசிக்கின்றன.

இந்த அளவு முன்பு 82.4% ஆக இருந்தது. இக்குடும்பங்களில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதி நாலறை வீட்டில் வசிக்கின்றன. இதுவே கடந்த பத்து ஆண்டுகளில் பொதுவான வகை வீடாக இருந்து வந்துள்ளது.

இந்தப் போக்கு எல்லா இனத்தவர்களிடத்திலும் காணப்படுகிறது. இருந்தாலும் மலாய்க்காரர்களைப் பொறுத்தவரை வீவக அடுக்கு வீடுகளில் வசிப்போர் அளவு 96.2% ஆக இருக்கிறது.

மலாய்க் குடும்பங்களில் கூட்டுரிமை அடுக்குமாடி வீடுகளில் வசிக்கும் குடும்பங்களின் விகிதம் 3% ஆக உள்ளது.

இது சீனக் குடும்பங்களைப் பொறுத்தவரை 17.3% ஆகவும் இந்தியக் குடும்பங்களைப் பார்க்கையில் 16.2 % ஆகவும் இருக்கிறது.

ஏறக்குறைய 5% குடும்பங்கள் தரை வீடுகளில் வசிக்கின்றன. (மலாய்க் குடும்பங்கள் 0.7%; இந்தியக் குடும்பங்கள் 3.9%; சீனக் குடும்பங்கள் 5.6%).

சொந்த வீட்டில் உரிமையாளர்கள் குடியிருக்கும் குடும்பங்களின் விகிதம் மொத்தத்தில் 10ல் 9 ஆக இருந்தது.

இது ஒருபுறம் இருக்க, கடந்த 10 ஆண்டுகளில் சராசரி குடும்ப அளவு 3.5 பேர் என்ற அளவில் இருந்து 3.2 பேராகக் குறைந்தது.

ஒரு நபர் குடும்பங்கள் 12.2% லிருந்து 16% ஆக அதிகரித்தன. இரண்டு பேர் குடும்பங்கள் 18.8% லிருந்து 22.6% ஆகக்கூடின. மலாய் சராசரி குடும்ப அளவு 2020ல் 3.7 பேராக இருந்தது.

இந்த அளவு, சீனக் குடும்பங்கள், இந்தியக் குடும்பங்களைப் பொறுத்தவரை முறையே 3.1 ஆகவும் 3.4 ஆகவும் இருக்கிறது. இந்திய ஒரு நபர் குடும்பங்கள் விகிதம் 12.7%. ஆக இருந்தது.

குடும்பத்தினர் அனைவரும் குறைந்தபட்சம் 65 வயதுள்ளவர்களாக இருக்கும் குடும்பங்கள் விகிதம் 4.6% ஆக இருந்தது. 2020ல் இத்தகைய குடும்பங்கள் 9.3% ஆகக் கூடிவிட்டதாகத் தெரியவந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!