சிங்கப்பூரின் மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டோர் குறைந்தது ஒரு கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்காக அம சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் சனிக்கிழமையன்று தெரிவித்தார். கிட்டத்தட்ட 36 விழுக்காட்டினர் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டுள்ளனர்.
இந்தத் தகவலை தமது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட திரு ஓங், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கையை நாம் அனைவரும் உயர்த்தவேண்டும் என்று தெரிவித்தார்.
"நம்மால் இயன்ற வரை துரிதமாக செயல்படுத்தப் பாடுபடுகிறோம். ஆனால் தடுப்பூசிக்கான உலக தேவை அதிகரித்து இருப்பதால் சில வரையறைகள் உள்ளன. இருந்தாலும் மேலும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் விநியோகிக்க நாங்கள் இயன்றவரை செய்ய முற்படுவோம்," என்று அவர் கூறினார்.

