866 மோசடி புகார்களின் தொடர்பில் போலிசார் 219 ஆடவர்களையும் 92 பெண்களையும் விசாரித்து வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்டோர் 8.2 மில்லியன் வெள்ளிக்கு மேல் இழந்தனர்.
ஜூன் 5ஆம் தேதிக்கும் 18ஆம் தேதிக்கும் இடையே நடத்தப்பட்ட தேடல் நடவடிக்கைக்குப் பிறகு இந்த மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இணைய காதல் மோசடி, அரசாங்க அதிகாரிகளைப் போல நடித்து ஏமாற்றுதல், போலியான சூதாட்ட தளம் ஆகியவை அந்த மோசடிகள் ஆகும்.
மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல், உரிமமின்றி கட்டணச் சேவைகளை வழங்குதல் போன்ற குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

