'சினோவேக்கைவிட ஃபைசர் தடுப்பூசி செயல்திறன்மிக்கது'

'சினோவேக்கைவிட ஃபைசர் தடுப்பூசி செயல்திறன்மிக்கது'

1 mins read
9b39b9aa-7520-4349-b2ea-bd56c3367179
-

ஹாங்காங்: சீனத் தயாரிப்பான சினோவேக் கொவிட்-19 தடுப்பூசியைவிட, ஃபைசர்-பயோ என்டெக் தடுப்பூசி அதிகளவில் நோயெதிர்ப்புப்பொருள் (ஆன்டி பாடி) உற்பத்தியைத் தூண்டுகிறது என்று ஹாங்காங் பல்கலைக்கழக ஆய்வைக் குறிப்பிட்டு, 'சௌத் சைனா மார்னிங் போஸ்ட்' நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.

சினோவேக் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு மூன்றாவது ஊசியும் தேவைப் படலாம் என்பதை அந்த ஆய்வு முடிவுகள் காட்டுவதாகக் கூறப் படுகிறது. முன்னணி நோய்த் தொற்றியல் வல்லுநர் பெஞ்சமின் கௌலிங் தலைமையில் அரசாங்கம் அமைத்த ஆய்வுக் குழு, தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆயிரம் பேரிடம் நோயெதிர்ப்புப் பொருள் குறித்து ஆராய்ந்தது.