'தாய்மொழிகள் இன்னும் சிறப்பாக மேம்படுத்தப்பட வேண்டும்'

'தாய்மொழிகள் இன்னும் சிறப்பாக மேம்படுத்தப்பட வேண்டும்'

2 mins read

சிங்கப்பூரில் வசிக்கும் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் அதிகம் கல்வி கற்கிறார்கள், குறிப்பாக பல்கலைக்கழக பட்டத்தைப் பெறுகிறார்கள். பல மொழிகளில் படிக்க, எழுதத் தெரிந்தவர்கள் முன்பைவிட இப்போது அதிகம். வீட்டில் ஆங்கிலம் பேசுவோர் எண்ணிக்கையும் அதிகமாகி இருக்கிறது.

இந்த நிலை வரவேற்கத்தக்கது. ஆனாலும் இதில் இதர பிரச்சினைகளும் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். பட்டதாரிகள் எண்ணிக்கை தேவையைவிட அதிகமாகும்; அவர்களுக்குப் பொருத்த மாக வேலை கிடைக்காமல் போகும்; தாய்மொழி பாரம்பரியத்திற்குப் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு ஆகியவை இருப்பதை அவர்கள் சுட்டினர்.

இது பற்றி கருத்துத் தெரிவித்த ஹாங்காங் சீனப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் ஏரோன் கோ, "போட்டி தீவிரமடையும் என்று தெரிவித்தார். பட்டப்படிப்புகளின் படிநிலை அங்கீகரிப்பப்படும்.

"அந்தப் பட்டதாரிகளுக்கு வேலைகளை எங்கே தேடுவது?," என்று கேட்ட அந்த இணைப் பேராசிரியர், அரசாங்கம் தொழில்முனைப்பை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார். சிங்கப்பூரர்கள் வெளிநாடுகளில் தொழில்களில் ஈடுபடுவதையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.

கடந்த 2010ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பத்து ஆண்டுகளில் பல்கலைக்கழக பட்டதாரி களின் விகிதாச்சாரம் அதிகரித்து இருக்கிறது. இந்தியர் களில் 41.3%, சீனர்களில் 34.7%, மலாய்க்காரர்களில் 10.8% ஆக இது இருக்கிறது. மொழியைப் பொறுத்தவரை குடிமக்கள் நிரந்தரவாசி களில் ஏறத்தாழ பாதிப்பேர் வீட்டில் அடிக்கடி ஆங்கிலம் பேசுகிறார்கள். இதன் தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய கல்விக் கழகத்தின் இணைப் பேராசிரயர் டான் சீ லே, தாய்மொழிகள் இன்னும் சிறப்பாக மேம்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.