வருவாய் அதிகரிப்பு: வல்லுநர்கள் கருத்து

வருவாய் அதிகரிப்பு: வல்லுநர்கள் கருத்து

1 mins read
74328744-74bf-43d1-8bc6-32cc8bef4b5f
கொவிட்-19 கிருமிப்பரவல் காலத்தில் வசிப்பதற்கு உலகின் ஆகச் சிறந்த இடமாக புளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின் கொவிட் மீள்திறன் தரவரிசையில் சிங்கப்பூர் இடம்பிடித்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் வசிக்கும் குடிமக்கள், நிரந்தரவாசிகளின் குடும்பங்களில் 28.5% குடும்பங்கள் 2000ஆம் ஆண்டில் வேலை மூலம் மாதம் சராசரியாக $1,000 முதல் $2,999 வரை ஈட்டின.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 2010ல் வேலை மூலம் $3,000 முதல் $4999 வரை மாதச் சராசரி வருவாய் சம்பாதித்த குடும்பங்கள் அளவு 16.2% ஆக இருந்தது. அதற்குப் பத்தாண்டுகள் கழித்து 2020ல் 13.9% குடும்பங்களின் மாத சராசரி வருமானம் $20,000 மற்றும் அதற்கும் அதிகம். 12.2% குடும்பங்கள் மாதம் $3,000க்கும் அதிக தொகையை ஊதியமாகப் பெற்றன.

சிங்கப்பூர்வாசிகள் இப்போது அதிகம் சம்பாதிக்கிறார்கள். அதிக ஊதியம் பெறுவோர் பிரிவில் அவர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள் என்பது சில நாட்களுக்கு முன் வெளியான புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை மூலம் தெரியவருகிறது. வேலை மூலம் மாதம் குறைந்தபட்சம் $9,000 சம்பளம் ஈட்டும் குடும்பங்கள் 2000ஆம் ஆண்டில் 13.1% ஆக இருந்தன. இந்த அளவு இப்போது 44.2% ஆகக் கூடி இருக்கிறது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இதனிடையே, இந்த நிலவரங்கள் மூலம் வருவாய் ஏற்றத்தாழ்வு அதகரிப்பதாகத் தெரிகிறது என்றும் வேலைகள், வருவாய் இடைவெளி பிரச்சினைகளைச் சமாளிப்பதில் அதிகம் கவனம் இடம்பெறவெண்டும் என்றும் பொருளியல், சமூக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.