முரசொலி
சிங்கப்பூர் மக்கள்தொகையில் 2010ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரைப்பட்ட பத்தாண்டு காலத்தில் குறிப்பிடத்தக்க பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கின்றன. நாட்டின் ஆறாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் முக்கியமான பல நிலவரங்கள் தெரிய வந்துள்ளள.
சிங்கப்பூர் 1965ல் சுதந்திரம் அடைந்தது முதல் மக்கள்தொகை பெருக்கம் இந்த பத்தாண்டுகளில்தான் ஆகக் குறைவாக இருக்கிறது. ஒற்றையராகவே வாழும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது.
திருமணம் செய்துகொண்டவர்களும் குறைவாகவே பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு உள்ளனர். ஆகைல் குழந்தை பிறப்பும் குறைந்துவிட்டது.
எல்லா வயது, எல்லா இன மக்களுமே கல்வியில் மேம்பட்டு இருக்கிறார்கள். சமயம் சாராதவர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் சிங்கப்பூரர்கள் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது.
சிங்கப்பூரில் வசிக்கும் குடிமக்கள், நிரந்தரவாசிகளில் ஏறக்குறைய 100,000 பேர் சுயமாகச் செயல்பட திணறுகிறார்கள். அல்லது அப்படி செயல்பட முடியாமல் இருக்கிறார்கள்.
இவை எல்லாம் மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்து இருக்கும் முக்கியமான நிலவரங்கள். இந்தக் கருத்தெடுப்பு ஒரு சாராம்சத்தைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
அதாவது, உலகில் வேகமாக மூப்படைந்து வரும் சமூகங்களில் சிங்கப்பூரும் ஒன்று என்பதே அந்த உண்மை நிலவரம். இங்கு 2030ஆம் ஆண்டு வாக்கில் மக்களில் நான்கு பேரில் ஒருவருக்கு வயது 65க்கு அதிகமாக இருக்கும் என்பது ஒரு கணக்கீடு.
இது ஒருபுறம் இருக்க, பிறப்பு விகிதமும் குறைந்து வருகிறது. இதையும் கவனத்தில் கொண்டு பார்க்கையில், பொருளியலிலும் சமூகத்திலும் இந்த நிலவரங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் மிகவும் அதிகமாகவே இருக்கும் என்ற முடிவுக்கு வரலாம்.
வேலை பார்ப்போரைப் பொறுத்தவரை, அவர்கள் அதிகமாக வரி செலுத்த வேண்டிய நிலை வரும்.
அதோடு, இதர பொருளியல் சுமைகளையும் அவர்களே சுமக்க வேண்டி இருக்கும். முதியோரில் முன்பைவிட அதிகமானவர்கள் தனிக வசிப்பார்கள். வீடுகளில் முதியோரைப் பார்த்துக்கொள்ளக்கூடிய பிள்ளைகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும். இதற்கு உரிய தீர்வாக வீட்டுவேலை பணிப்பெண்களை வேலையில் அமர்த்த வேண்டிய நிலை வரும். முதியவர்களை வீட்டிலேயே பராமரிக்கும் ஊழியர்களுக்கும் தாதியர்களுக்கும் தேவை அதிகமாகும்.
இவை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். மனிதர்களுக்கு வயது ஆக ஆக பொதுவாக நோய்களும் பல தொல்லைகளும் அதிகரிக்கவே செய்யும் என்பதையும் கவனிக்க வேண்டும். நினைவாற்றலை இழப்பது, நீரிழிவு, இதய நோய் எல்லாம் ஏற்படு வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.
சிங்கப்பூர் மக்களின் ஆயுள் அதிகம், அவர்கள் அதிக காலம் வாழ்வார்கள். அதோடு, அத்தகைய மக்களின் எண்ணிக்கை கூடும் என்பதால் அதற்கு ஏற்ப சுகாதார பராமரிப்புச் சேவைகள் எல்லாம் அவர்களுக்குக் கிடைக்கக்கூடியவைக, கட்டுபடிகக் கூடியவைக இருக்கவேண்டியது கட்டாயமானது.
இவற்றை எல்லாம் முன்னதாகவே கணித்து, கணக்கிட்டு அரசாங்கம் பல்வேறு ஏற்பாடுகளை, திட்டங்களை இடைவிடாமல் செயல்படுத்தி வரு கிறது. புதிய மருத்துவமனைகள் கட்டப்படுகின்றன. தாதிமை விடுதிகளும் உருவாகி வருகின்றன. சமூக, அடிப்படை சுகாதார பராமரிப்புக்ககான வளங்கள் அதிகமாக்கப்படுகின்றன.
முதுமையில் இளமை என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதை நிறைவேற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, முதியவர்கள் சுறுசுறுப்பாக இருந்து வர ஊக்கமூட்டப்படுகிறார்கள்.
சுகாதார மராமரிப்புக்கு ஆகும் செலவைக் குறைத்து சிக்கனமாக்குவது, இதில் ஒளிவு மறைவு இல்லாத நிலையை எப்படி உறுதிப்படுத்துவது ஆகியவை எல்லாம் மும்முரமாக விவாதிக்கப்பட்டு வருக்கின்றன.
பராமரிப்பாளர்களைச் சார்ந்து இருக்கும் முதி யோர் எண்ணிக்கை அதிகமாகும் என்பதால் அத்தகைய ஊழியர்களுக்குச் சுமை கூடும்.
காலம் மாறுவதால், மருத்துவ கண்டுபிடிப்புகள் மேம்படுகின்றன என்பதால் அதற்கு ஏற்ப பராமரிப்பு ஊழியர்களுக்குத் தேவைன அறிவைப் போதித்து, ஆற்றல், தேர்ச்சிகளைக் கற்பித்து அவர்களுக்கு ஆதரவு அளிக்கவேணடிய தேவையைத் தவிர்க்க இயலாது.
வீட்டிலேயே தாதியர்கள் பராமரிப்புச் சேவையை வழங்குவது, மருத்துவ, இதர பராமரிப்புத் திட்டங்கள் போன்றவற்றை அதிகமாக்கி, குடியிருப்புப் பேட்டைக்குள் சிறார் பராமரிப்புச் சேவைகள் இடம்பெறுவதைப் போல், முடிந்தால் அவற்றைச் சமூகத்திற்கு உள்ளேயே இடம்பெறச் செய்வது பொருத்தமானதாக இருக்கும். முதியோர் பராமரிப்பு ஊழியர்களுக்கு முதலாளிகள் அதிக ஆதரவு தர வேண்டியது மிகவும் முக்கியமானது. இல்லை எனில் இவர்கள் வேலையை விட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள்.
சிங்கப்பூரில் முந்தைய பத்தாண்டு காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் 2010 முதல் 2020 வரைப்பட்ட பத்தாண்டு காலத்தில் முதிய சிங்கப்பூரர்களின் உடல் நலனும் ஆயுளும் மேம்பட்டு இருக்கிறது என்பது தெரியவருகிறது.
ஆகைல் அவர்களில் அதிகமானவர்கள் கூடு மானவரை வேலை பார்க்கக்கூடியவர்களாக, தொண்டூழியர்களாக, தங்களைத் தாங்கள் கனித்துக் கொள்ளக்கூடிவர்களாக இருந்து வந்தால் அதுவே சிங்கப்பூர் எதிர்நோக்கக்க கூடிய பல பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடும்.
பொருத்தமான தேர்ச்சிகளைத் தொடர்ந்து கற்றுக்கொண்டு அவர்கள் தொடர்ந்து வேலை பார்க்கவும் முடியும். இதைப் பொறுத்தவரை இரண்டு அம்சங்கள் மிகவும் முக்கியமானவை.
ஒன்று, சிங்கப்பூரர்கள் ஆயுள் முற்றிலும் கற்பதில் நாட்டம்கொள்ள வேண்டும். முதியோர் தொடர்பிலான முதலாளிகளின் மனப்போக்கு மாற வேண்டும்.
சிங்கப்பூர் மக்கள்தொகையைப் பொறுத்தவரை மிக முக்கியமான நிலவரங்கள் இப்போது தெரியவந்து உள்ளன.
அவற்றால் ஏற்படக்கூடிய பாதகங்களைச் சாதகங்களாக மாற்றிக்கொள்ள தேவைப்படும் நடவடிக்கைகளை இந்தக் காலகட்டத்திலேயே எடுக்க வேண்டும். இதற்கு இது தக்க தருணம். இதில் வருமுன் காக்கும் அணுகுமுறை அவசியம்.

