ஈஸ்ட் கோஸ்ட் மக்களுக்கு உதவ மின்னிலக்கத் திட்டம்

ஈஸ்ட் கோஸ்ட் மக்களுக்கு உதவ மின்னிலக்கத் திட்டம்

2 mins read
17c77c85-59ae-45a0-b4e9-b93bd1b1e614
இடமிருந்து- ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாலிக்கி ஒஸ்மான், ஜசிக்கா டான், ஹெங் சுவீ கியட், செரில் டான் ஆகியோர். படம்: ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி -

வசதி குறைந்தவர்கள், முதியவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவிக்கரம்

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்­தொ­கு­தி­யைச் சேர்ந்த வசதி குறைந்­த­வர்­களுக்கும் மின்­னி­லக்­கம் பற்றி அவ்­வ­ள­வாக தெரி­யா­த­வர்­க­ளுக்­கும் பல மின்­னிலக்க உத­வித் திட்­டங்­கள் இடம்­பெற இருக்­கின்­றன. மடிக் கணினி கொடை­யும் அவற்­றில் அடங்­கும்.

'ஈஸ்ட் கோஸ்ட் மின்­னி­லக்க வழி­காட்­டித் திட்டம்' என்ற ஒரு திட்­டம் நேற்று தொடங்­கப்­பட்­டது.

கணி­னி­கள் போன்ற சாத­னங்களை எட்­டு­வ­தற்­கான வழி களை அதி­கப்­ப­டுத்­து­வது, முதி­ய­வர்­க­ளிடையே மின்­னி­லக்க அறிவை அதி­க­மாக்­கு­வது, நகர மைய நிறு­வ­னங்­கள் தங்­கள் இணைய வச­தி­களை விரி­வாக்க உத­வு­வது ஆகி­யவை அந்த திட்­டத்­தின் நோக்­கம்.

அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­படும் கணினிகளைக் குறைந்த வரு­வாய்க் குடும்­பங்­க­ளுக்­குக் கொடுப்­பது ஒரு செயல்திட்­டம்.

முன்­ன­தாக அந்­தக் கணி­னி­களில் ஏதே­னும் குறை­கள் இருந்­தால் அவற்­றை எஸ்ஜி போனோ என்ற தொண்டூ­ழிய அமைப்பு சரிப்­படுத்தித் தரும். இதற்­காக பிடோக்­கில் ஹார்ட்­பீட் சமூக மன்­றத்­தில் கூடம் ஒன்றை அது அமைக்­கும்.

புதிய வழி­காட்டி திட்­டம் பற்றி அறி­வித்த துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட், கொவிட்-19 கார­ண­மாக மின்­னி­லக்­கத்­தி­ற்கு மாற வேண்­டி­யது முக்­கி­ய­மா­ன­தாக ஆகி இருக்­கிறது என்­றார்.

இந்­தக் குழுத்­தொ­கு­தி­யின் மற்ற நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அத்­தொ­கு­தி­யில் நடப்­புக்கு வர உள்ள பல திட்­டங்கள் பற்றி பேசி­னர்.

முதி­ய­வர்­க­ளுக்கு குறுஞ்­செய்தி செயலி, தொலை மருத்­துவ சேவை பற்றி போதிக்க பயி­ல­ரங்­கு­கள் நடக்­கும்.

பள்­ளிக்கூடப் பிள்­ளை­கள் கூகல் செயல்­பா­டு­கள் பற்றியும் பல்வேறு வடி­வ­மைப்­புச் செய­லி­கள் பற்றியும் தெரிந்­து­கொள்ள பயி­ல­ரங்­கு­கள் நடத்­தப்­படும் என்­றும் தெரி­விக்­கப்பட்­டது.