பாதிக்கப்பட்ட டிபிஎஸ் வாடிக்கையாளர்களுக்கு பணம் மீண்டும் வரவு வைக்கப்பட்டது

பாதிக்கப்பட்ட டிபிஎஸ் வாடிக்கையாளர்களுக்கு பணம் மீண்டும் வரவு வைக்கப்பட்டது

2 mins read
b232a9fb-1265-4a5c-9ba7-91d8af1fc52e
-

கடன் மற்­றும் பற்று அட்­டை­களைப் பயன்­ப­டுத்தி பணம் கொடுக்­கல் வாங்­கல் செய்­த­போது தங்­க­ளுக்கு அதற்­கான கட்­ட­ணம் இரண்டு முறை கழிக்கப்­பட்­ட­தாக டிபி­எஸ் வங்கி வாடிக்­கை­யா­ளர்­கள் பலர் புகார் தெரி­வித்தனர்.

தொழில்­நுட்­பக் கோளாறே இதற்­குக் கார­ணம் என்­றும் அந்தக் கோளாறு சரி­செய்­யப்­பட்­டு­விட்­ட­தா­க­வும் சிங்­கப்­பூ­ரின் மிகப் பெரிய வங்­கி­யான டிபி­எஸ் ஃபேஸ்புக்­கில் தெரி­வித்­தது.

பாதிக்கப்பட்ட அனை­வ­ருக்­கும் இன்று பணம் திருப்­பித் தரப்­பட்டு விட்டதாக வங்கி குறிப்­பிட்­டது.

இத­னி­டையே, ஊட­கக் கேள்வி ­க­ளுக்­குப் பதில் அளித்த இந்த வங்­கி­யின் பேச்­சா­ளர், பட்­டு­வாடா நடை­மு­றை­யில் கோளாறு இருந்­தது தெரி­ய­ வந்­த­தா­க­வும் அதன் கார­ண­மாக சில கடன் மற்­றும் பற்று அட்­டை­களில் போலி­யான பணப் பரி­வர்த்­த­னை­கள் இடம்­பெற்­ற­தா­க­வும் தெரி­வித்­தார்.

இந்­தத் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காணப்­பட்­டு­விட்­டது என்றாரவர்.

வங்கிச் செயல்முறை­கள் பாது­காப்­பா­ன­வை­யாக, எந்­தக்­ குறை பாடும் இன்றி இருக்­கின்­றன என்று வாடிக்­கை­யா­ளர்­கள் அனை­வ­ருக்­கும் வங்கி உறுதி அளிப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

பணம் இரண்டு முறை கழிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் கணக்­கில் அந்­தத்­ தொ­கை­யைத் தானா­கவே திருப்பி வரவு வைக்­கும் நடை­முறை தொடங்­கி­விட்­ட­தா­க­வும் இது இன்று முடிந்­து­வி­டும் என்றும் பேச்­சா­ளர் மேலும் கூறி­னார்.

இத­னி­டையே, பணம் தவ­று­தலா­கக் கழிக்­கப்­பட்ட சம்­ப­வம் பற்றி புலன்­வி­சா­ரணை நடத்தி அறிக்­கை­யைத் தாக்­கல் செய்­யும்­படி சிங்­கப்­பூர் நாணய ஆணையம் டிபிஸ் வங்­கிக்கு உத்­த­ர­விட்டு உள்­ளது.

ஆணை­யத்­தின் எதிர்­பார்ப்பு களை நிறை­வேற்ற வங்கி தவறி இருந்­தால் மேற்­பார்வை நட­வடிக்கை எடுக்­கப்­படும் என்று ஆணை­யத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­துள்­ளது.

இந்­த சம்­ப­வத்­தைக் கடு­மை­யான ஒன்­றாக ஆணை­யம் கருது­கிறது.

நிதி நிறு­வ­னங்­கள் அனைத்­தும் தங்­கள் தக­வல்­தொ­ழில்­நுட்ப முறை­க­ளின் நம்­ப­கத்­தன்­மையை உறு­திப்­ப­டுத்­தும் நடை­மு­றைகளை நடை­மு­றைப்­படுத்தி வரும் என்றும் தங்­கள் வாடிக்­கை­யாளர்­க­ளுக்­குச் செம்­மை­யான முறையில் நிதிச் சேவை­களை அவை வழங்­கும் என்­றும் ஆணையம் எதிர்­பார்ப்­ப­தா­க­ அதன் பேச்­சாளர் கூறி­னார்.