செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
201c7e2a-4ea2-453c-856d-bd1074afb412
-

வருவாய் அதிகரிப்பு:

வல்லுநர்கள் கருத்து

சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் குடி­மக்­கள், நிரந்­த­ர­வா­சி­களின் குடும்­பங்­களில் 28.5% குடும்­பங்­கள் 2000ஆம் ஆண்­டில் வேலை மூலம் மாதம் சரா­ச­ரி­யாக $1,000 முதல் $2,999 வரை ஈட்­டின.

பத்து ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு 2010ல் வேலை மூலம் $3,000 முதல் $4999 வரை மாதச் சரா­சரி வரு­வாய் சம்­பா­தித்த குடும்­பங்­கள் அளவு 16.2% ஆக இருந்­தது.

அதற்­குப் பத்­தாண்­டு­கள் கழித்து 2020ல் 13.9% குடும்­பங்­களின் மாத சரா­சரி வரு­மா­னம் $20,000 மற்­றும் அதற்­கும் அதிகம். 12.2% குடும்­பங்­கள் மாதம் $3,000க்கும் அதிக தொகையை ஊதி­ய­மா­கப் பெற்­றன.

சிங்­கப்­பூர்­வா­சி­கள் இப்­போது அதி­கம் சம்­பா­திக்­கி­றார்­கள். அதிக ஊதி­யம் பெறு­வோர் பிரிவில் அவர்­கள் இடம் பெற்று இருக்­கிறார்­கள் என்­பது சில நாட்­களுக்கு முன் வெளி­யான புதிய மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்பு அறிக்கை மூலம் தெரி­ய­வ­ரு­கிறது.

வேலை மூலம் மாதம் குறைந்­த­பட்­சம் $9,000 சம்­ப­ளம் ஈட்டும் குடும்­பங்­கள் 2000ஆம் ஆண்­டில் 13.1% ஆக இருந்­தன. இந்த அளவு இப்­போது 44.2% ஆகக் கூடி இருக்­கிறது என்று அந்த அறிக்கை தெரி­விக்­கிறது.

இத­னி­டையே, இந்த நில­வ­ரங்­கள் மூலம் வரு­வாய் ஏற்றத்தாழ்வு அத­க­ரிப்­பதாகத் தெரி­கிறது என்­றும் வேலை­கள், வரு­வாய் இடை­வெளி பிரச்­சி­னை­க­ளைச் சமா­ளிப்­பதில் அதி­கம் கவ­னம் இடம்­பெ­ற­வெண்­டும் என்­றும் பொரு­ளி­யல், சமூக வல்லுநர்­கள் கூறுகிறார்கள்.

'தாய்மொழிகள் இன்னும் சிறப்பாக மேம்படுத்தப்பட வேண்டும்'

சிங்கப்பூரில் வசிக்கும் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் அதிகம் கல்வி கற்கிறார்கள், குறிப்பாக பல்கலைக்கழக பட்டத்தைப் பெறுகிறார்கள். பல மொழிகளில் படிக்க, எழுதத் தெரிந்தவர்கள் முன்பைவிட இப்போது அதிகம். வீட்டில் ஆங்கிலம் பேசுவோர் எண்ணிக்கையும் அதிகமாகி இருக்கிறது.

இந்த நிலை வரவேற்கத்தக்கது. ஆனாலும் இதில் இதர பிரச்சினைகளும் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். பட்டதாரிகள் எண்ணிக்கை தேவையைவிட அதிகமாகும்; அவர்களுக்குப் பொருத்த மாக வேலை கிடைக்காமல் போகும்; தாய்மொழி பாரம்பரியத்திற்குப் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு ஆகியவை இருப்பதை அவர்கள் சுட்டினர்.

இது பற்றி கருத்துத் தெரிவித்த ஹாங்காங் சீனப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் ஏரோன் கோ, "போட்டி தீவிரமடையும் என்று தெரிவித்தார். பட்டப்படிப்புகளின் படிநிலை அங்கீகரிப்பப்படும்.

"அந்தப் பட்டதாரிகளுக்கு வேலைகளை எங்கே தேடுவது?," என்று கேட்ட அந்த இணைப் பேராசிரியர், அரசாங்கம் தொழில்முனைப்பை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார். சிங்கப்பூரர்கள் வெளிநாடுகளில் தொழில்களில் ஈடுபடுவதையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.

கடந்த 2010ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பத்து ஆண்டுகளில் பல்கலைக்கழக பட்டதாரி களின் விகிதாச்சாரம் அதிகரித்து இருக்கிறது. இந்தியர் களில் 41.3%, சீனர்களில் 34.7%, மலாய்க்காரர்களில் 10.8% ஆக இது இருக்கிறது.

மொழியைப் பொறுத்தவரை குடிமக்கள் நிரந்தரவாசி களில் ஏறத்தாழ பாதிப்பேர் வீட்டில் அடிக்கடி ஆங்கிலம் பேசுகிறார்கள். இதன் தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய கல்விக் கழகத்தின் இணைப் பேராசிரயர் டான் சீ லே, தாய்மொழிகள் இன்னும் சிறப்பாக மேம்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.