$8.2 மி. மோசடி; 311 பேரிடம் விசாரணை

$8.2 மி. மோசடி; 311 பேரிடம் விசாரணை

2 mins read
f249f34a-70d2-4705-aa2a-fac31c9e3b2a
-

சிங்­கப்­பூ­ரில் 866 மோசடி சம்­ப­வங்­க­ளின் தொடர்­பில் போலி­சார் 311 பேரை விசா­ரித்து வரு­கின்­ற­னர். அச்­சம்­ப­வங்­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் 8.2 மில்­லி­யன் வெள்­ளிக்கு மேல் இழந்­துள்­ள­னர்.

விசா­ரிக்­கப்­பட்டு வரு­ப­வர்­களில் 219 பேர் ஆட­வர்­கள். 92 பேர் பெண்­கள். அனை­வ­ரும் 16 வய­துக்­கும் 84 வய­துக்­கும் உட்­பட்­ட­வர்­கள்.

இரண்டு வார நடவடிக்கை

கடந்த 5ம் தேதி­யி­லி­ருந்து வெள்­ளிக்­கி­ழமை 18ம் தேதி வரை போலி­சார் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­ க­ளின் விளை­வாக, இணைய வழி­யான காதல் மோசடி, அர­சாங்க அதி­கா­ரி­கள் போல ஆள்­மா­றாட்­டம், பொய்­யான சூதாட்­டத் தளங்­கள் அமைத்­தல் உள்­ளிட்ட மோச­டி­கள் கண்­ட­றி­யப்­பட்­டன.

பணமோசடி பற்றி விசாரணை

ஏமாற்­று­வேலை, பண­மோ­சடி, அல்­லது உரி­மம் இல்­லா­மல் கட்­ட­ணச் சேவை­களை வழங்­கு­தல் உள்­ளிட்ட குற்­றங்­க­ளின் தொடர்­பில் சந்­தேக நபர்­கள் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.

மோச­டிக் குற்­றங்­க­ளுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.

பண மோசடி செய்­வோருக்குப் பத்து ஆண்­டு­கள் வரை சிறைத் தண்­டனை, அல்­லது $500,000 வரை­யி­லான அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.

சிங்­கப்­பூ­ரில் உரி­மம் இன்றி கட்­ட­ணச் சேவை­களை வழங்­கும் நபர்­க­ளுக்கு மூன்று ஆண்­டு­கள் வரை சிறைத் தண்­டனை அல்­லது 125,000 வெள்ளி வரை­யி­லான அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.

துணைபோவதைத் தவிர்க்கவும்

இக்­குற்­றங்­களில் துணை போவ­தைத் தவிர்க்க, பொது­மக்­கள் தங்­கள் வங்­கிக் கணக்கை அல்­லது கைபேசி எண்­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள மற்­ற­வர்­கள் விடுக்­கும் கோரிக்­கை­களை நிரா­க­ரிக்க வேண்­டும்.

இந்த விவ­ரங்­கள் குற்­றச்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­ப­டுத்­தப்­பட்­டால், சம்­மந்­தப்­பட்­ட­வர்­கள் அவற்­றுக்­குப் பொறுப்பு ஏற்க வேண்­டி­யி­ருக்­கும் என்று போலி­சார் கூறினர்.