சமூகத்தில் புதிதாக 9 பேருக்குத் தொற்று

சமூகத்தில் புதிதாக 9 பேருக்குத் தொற்று

2 mins read
1a680b6f-fcb1-4f07-8f33-08ac51afdea8
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வரப்­படி புதி­தாக 11 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அவர்­களில் ஒன்­பது பேர் சமூ­கத்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­கள்.

இரண்டு பேர் வெளி­நா­டு­களில் இருந்து வந்தவர்­கள். சமூ­கத்­தொற்று ஏற்­பட்­ட­வர்­களில் ஐந்து பேருக்­குத் தொடர்­பில்லா தொற்று காணப்­பட்­டது.

நால்­வ­ருக்கு முன்பு கிருமி தொற்­றி­ய­வர்­க­ளு­டன் தொடர்பு இருந்­தது.

இவர்­களில் மூவர் ஏற்கெ­னவே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­கள்.

மற்­றொ­ரு­வர் பர­சோ­தனை மூலம் கண்­டறியப்­பட்­டார். வெளி நாட்­டில் இருந்து வந்த இரண்டு பேருக்­கும் தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது. அந்த இரு­வ­ரில் ஒரு­வர் இங்கு திரும்பி வந்த சிங்­கப்­பூ­ரர்.

ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் நேற்று புதி­தாக யாருக்­கும் தொற்று இல்லை. புதி­தாக கிருமி தொற்­றி­யோ­ரை­யும் சேர்த்து சிங்­கப்­பூ­ரில் கொரோனா கிருமி தொற்­றி­ய­வர்­களின் மொத்த எண்­ணிக்கை 62,414 ஆகக் கூடி­யது.

சிங்­கப்­பூர் தனது பொரு­ளி­யலை இன்று மேலும் திறந்து விடு­கிறது.

உண­வ­கங்­களில் அமர்ந்து உண்ண இன்று முதல் அனு­மதி உண்டு என்­றா­லும் இரண்டு பேர் வரை­தான் சேர்ந்து அமர்ந்து சாப்பிட முடி­யும் என்ற வரம்பு நடப்­பில் இருந்துவரும்.

ஐந்து பேர் வரை சேர்ந்து சாப்­பிட அனு­ம­திக்­க­லாம் என்று தொடக்­கத்­தில் திட்­ட­மி­டப்­பட்­டது.

ஆனால் இப்­போ­தைய தொற்று நில­வ­ரங்­க­ளைக் கவ­னத்­தில் கொண்டு அந்­தத் திட்­டம் ஜூலை நடுப்­ப­குதி வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

புக்­கிட் மேரா வியூ சந்தை, உண­வங்­காடி நிலை­யத்­தில் தலைதூக்கி உள்ள தொற்­றுக் குழு­மத்தைக் கட்டுப்­ப­டுத்த அதி­கா­ரி­கள் கடுமை யாகப் போராடி வருகிறார்­கள்.

சிங்­கப்­பூ­ரில் சென்ற வாரம் உள்­ளூ­ரில் 94 பேருக்­குத் தொற்று ஏற்­பட்­டது. இந்த எண்­ணிக்கை அதற்கு முந்­தைய வாரத்­தில் 41 ஆக இருந்­தது.