அதிக வருவாய் ஈட்டுவோரில் பாதிப்பேருக்கு பணப் பிரச்சினை

அதிக வருவாய் ஈட்டுவோரில் பாதிப்பேருக்கு பணப் பிரச்சினை

2 mins read
2a477fc4-d3b7-4c2c-b544-564f52666507
-

சிங்­கப்­பூ­ரில் அதிக வரு­வாய் ஈட்டும் பிரி­வி­ன­ரில் ஏறக்­கு­றைய பாதிப் பேர் போதிய சேமிப்பு இன்றி கவ­லைப்­படுகிறார்­கள்.

செயிண்ட் ஜேம்ஸ் பிளேஸ் என்ற சொத்து நிர்­வாக நிறு­வ­னம் நடத்­திய ஆய்வு மூலம் இது தெரிய வந்­துள்­ளது.

குறைந்தபட்­சம் $6,000 முதல் $20,000 க்கும் அதிக தொகையை மாத வரு­வா­யாகக்கொண்ட ஏறத் தாழ 1,000 சிங்­கப்­பூர்­களை உள்­ள­டக்கி அந்த ஆய்வு நடத்­தப்­பட்­டது.

போதிய தொகை­யைச் சேமிக்க முடி­ய­வில்­லையே என்று கவ­லைப்­படு­வ­தோடு மட்­டு­மின்றி, செல­வு­களை ஈடு­செய்­யும் அள­வுக்­குத் தங்­கள்­ மாத வரு­வாய் போது­மான தாக இல்லை என்று அவர்கள் தெரி­விக்­கி­றார்­கள்.

பல கட்­ட­ணங்­க­ளைச் செலுத்த சேமிப்­பில் கைவைக்க வேண்­டிய நிலை இருப்­ப­தாகவும் அவர்­கள் கூறு­கி­றார்­கள். ஆகை­யால் ஓய்­வு­பெ­றும்போது தங்­கள் விருப்­ப­தற்கு ஏற்ற வாழ்க்கை பாணியை அனுப­விக்க போதிய பணம் தங்­க­ளி­டம் இருக்­காது என்று 46% ஏங்­கு­கிறார்­கள். ஆனா­லும் இந்த தொற்று கார­ண­மாக ஆக்­க­க­ர­மான ஒரு நில­வ­ரம் காணப்­ப­டு­கிறது.

ஆய்­வில் பங்­கெ­டுத்­துக் கொண்­ட­வர்­களில் பெரும்­பா­லா­னோர் தங்­கள் ஓய்வு காலத்­திற்­குத் திட்­டமி­டத் தொடங்கி இருக்­கிறார்கள் என்­றும் இந்த அவ­ச­ரத்தை கொவிட்-19 தொற்று அவர்­க­ளி­டம் ஏற்­ப­டுத்தி இருக்­கிறது என்­றும் ஆய்வு குறிப்­பி­டு­கிறது.

இது அவர்­க­ளின் விருப்­ப­மாக இருக்­கிறது. ஆனால் பாதிக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் தாங்­கள் முன்பு போட்ட சேமிப்­புத் திட்­டங்­களை நிறை­வேற்­றவே தடு­மாறுகிறார்­கள் என்­ப­துதான் உண்மை நில­வ­ரம் என்று ஆய்வு குறிப்­பிட்­டுள்­ளது.

அவர்­கள் ஓய்வு காலத்­திற்கு என்று சேமித்­து­ வை­த்தவற்­றில் கைவைக்க வேண்­டிய நிலை ஏற்­பட்டு இரு­ப்­பதே இதற்­கான கார­ணம் என்று தெரிவிக்­கப்­பட்­டது.

கொவிட்-19 தொற்று கார­ண­மாக பல சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டம் பணப் பாதிப்பு கணிச­மான அள­வுக்கு ஏற்­பட்­டுள்­ளது என்று ஆய்வு நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி கேரி ஹார்வே தெரி­வித்­தார்.

இதன் கார­ண­மாக பல­ரும் பணத்­தைப் பொறுத்­த­வரை மிக­வும் எச்­ச­ரிக்­கை­யாக இருந்துகொள்­கி­றார்­கள் என்று அவர் கூறி­னார்.

இதற்கிடையே, மக்கள் எதிர்­கா­லத்­தில் இருந்து நிகழ்­கா­லத்­திற்கு கடன் வாங்­கு­கி­றார்­கள் என்­பது கவலை தரு­வ­தாக இருக்­கிறது என்றாரவர்.

நடுத்­தர, அதிக வரு­வாய் உள்­ள­வர்­கள் ஓய்வு காலத்­திற்கு அதி­கம் சேமிக்க தடை­யாக இருக்­கும் ஐந்து முக்­கிய அம்சங்­கள் இந்த ஆய்வு மூலம் தெரியவந்­துள்­ளன.

அதிக வாழ்க்­கைச் செலவு; மிக அதி­கம் சம்­பா­திப்­போர் பணத்தை அப்­ப­டியே வைத்து இருப்­பது; குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு ஆதரவு அளிப்­பது; செல­வு­க­ளைக் கட்­டுப்­படுத்த முடி­யா­மல் தவிப்­பது; நிதி திட்­டமின்றி இருப்­பது ஆகி­யவை அந்த ஐந்து அம்­சங்­கள் என்று ஆய்வு தெரி­விக்­கிறது.