செயலிக்குப் பதில் வாகன ஓட்டுநர்: கடைக்காரர் உத்தி

2 mins read
4b614397-b6cd-4436-bd4d-f9ef3d45e9ed
-

உண­வங்­கா­டிக் கடை­களில் அமர்ந்து உணவு உண்ண தடை விதிக்­கப்­ப­பட்டு இருந்­த­தால் பல கடைக்­கா­ரர்­கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­ட­னர்.

ஆனால் தோ பாயோ வெஸ்ட்­டில் 'கம் டெய்லி ஃபிரைடு ஹாக்­கி­யன் பிரான் மீ' என்ற கடையை நடத்­தும் ஜேசன் ஹூவாங் என்­பவர், 53 ஆண்டுகளாக நடந்து வரும் தனது குடும்ப வியா­பாரத்தை நசிய விடா­மல் காப்­பாற்றி வரு­கி­றார்.

அந்த மூன்­றாம் தலை­முறை கடைக்­கா­ரர் உணவு விநி­யோ­கச் செயலி எதை­யும் சார்ந்து செயல்­படவில்லை.

அதற்குப் பதி­லாக, அவர் தனி­யார் வாடகை வாக­னத்தை ஓட்­டி­வ­ரும் ரோனி டே, 32, என்­ப­வ­ரு­டன் கூட்டு சேர்ந்­தார்.

திரு ஜேசன், தனது கடை­யில் நாள் ஒன்­றுக்கு 250 மீ சாப்­பாடு பொட்­ட­லங்­களைத் தயா­ரிக்­கி­றார். கடைக்கு வரு­வோ­ருக்கு அவற்றில் பாதியை விற்­கி­றார்.

மற்றவற்றை வாகன ஓட்டுநர் மூலம் பல இடங்­களுக்கும் அனுப்பு­கி­றார். ரோனி டேயு­டன் கூட்டு சேர்ந்­து செயல்படுவதன் மூலம் திரு ஜேசன், செயலி பயன்­பாட்டுக்­குக் கொடுக்க வேண்­டிய 35% வரைப்­பட்ட தர­குத்­தொகையை மிச்­சப்­படுத்­து­கி­றார்.

கைபேசி முலம் அல்­லது ஃபேஸ்புக் வழி­யாக ஒரு நாள் முன்­ன­தாக தரு­விப்பு ஆணை­களைப் பெறுகிறார். இவ­ரும் தனி­யார் வாகன ஓட்­டு­ந­ரும் செய்­து­கொண்­டுள்ள ஏற்­பாடு, உச்ச நேர­மற்ற இதர நேரங்­க­ளி­லும் இருவரும் சுறு­ச­றுப்­பாகச் செயல்­பட வழி வகுக்­கிறது.

ஒரு தட­வைக்கு இவ்­வ­ளவு கட்­ட­ணம் என்று அந்த வாகன ஓட்­டு­ந­ருக்குத் தொகை கொடுக்­கப்­ப­டு­கிறது.

இது அவ­ருக்­குப் பக­லில் கிடைக்­கும் துணை வருவாயாக இருக்­கிறது. திரு ரோனி டே இர­வில் வாடகை வாக­னம் ஓட்டிச் சம்­பா­திக்­கி­றார்.