புரிதலை ஏற்படுத்துவதன் வழி இனவாதத்துக்கு எதிராக இனநல்லிணக்க நாள் செயல்படுகிறது.
மற்ற கலாசாரங்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு அது நல்ல கருவி. எனக்கும் அப்படித்தான்.
புளோக்குகளின் கீழ்த்தளத்தில் நடக்கும் மலாய் திருமணங்களைப் பார்க்க எனக்கு மிகவும் ஆசை. ஆனால் அவற்றைப் பற்றி விளக்க மலாய் நண்பர்கள் அதிகம் இல்லை. மலாய் திருமணங்களுக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.
அவற்றின் சடங்குகள் மற்றும் அவற்றின் பொருள் பற்றியும் மலாய்க்காரர்களுக்கு அவர்கள் உறவினருடன் உள்ள பிணைப்பு பற்றியும் கற்பதற்கு ஈராண்டுகளுக்கு முன்னர் எங்கள் உயர்நிலைப் பள்ளியில் நடந்த இன நல்லிணக்க நாள் கொண்டாட்டம் உதவியது.
இந்து, மலாய், சீனப் பாரம்பரியப்படியான பாவனைத் திருமணங்கள் விளக்கத்துடன் நடந்தன. அந்த நிகழ்வால் நிறைய பேருக்குத் தெரியாதவற்றைப் பற்றிய ஆழமான புரிதல் எனக்கு எற்பட்டது.
மற்ற இனத்தவருடன் பழகுவதற்குப் பயப்படத் தேவையில்லை என உணர்ந்தேன். எந்தப் பாகுபாடும் இல்லாத மனநிலையுடன் அவர்களுடன் பேசிப் பழக முனைந்தேன்.
இந்திய நண்பர்களுடன் எப்படிப் பேசுவேனோ அதேபோல மற்ற இனத்து நண்பர்களுடனும் பேசுகிறேன். மற்ற கலாசார இனத்தவரைப் பற்றி மேலும் கற்றுக்கொள்ள தொடர்ந்து முயல்வேன்.
- லாரன் பால், 18, மாணவி, ஆண்டர்சன்-சிராங்கூன் தொடக்கக் கல்லூரி

