வேறு­பாடுகள் பற்றி சில­ருக்கு இன்­னும் தெரியவில்லை

வேறு­பாடுகள் பற்றி சில­ருக்கு இன்­னும் தெரியவில்லை

1 mins read
79ec56c2-b9a7-4a05-abc6-539986f4a450
-

கொவிட்-19 தொற்­று­நோய் பற்­றிய பயம் பொது­மக்­க­ளைச் சூழ்ந்­துள்­ளது. அந்த பயத்தை எங்கு வெளிப்­ப­டுத்­து­வது என்று அவர்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை. இன­வாத சம்­ப­வங்­கள் அதி­க­ரிப்­ப­தற்கு இது­வும் ஒரு கார­ணம்.

"'இந்து', 'இந்தி' எனும் சொற்­க­ளின் வேறு­பாடு சில­ருக்கு இன்­னும் புரி­யா­மல் இருக்­கிறது. சம­யத்­துக்­கும் மொழிக்­கும் உள்ள அடிப்­படை வேறு­பாடு இவர்­க­ளைப் போன்­ற­வர்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை. நம் சமு­தா­யத்­தில் போதிய விழிப்­பு­ணர்வு இல்லை என்­பதை இது காட்­டு­கிறது என்றே சொல்­வேன்.

அதே நேரத்­தில் இந்­தி­யர்­க­ளா­கிய நாம் மற்­ற­வர்­க­ளுக்கு எவ்­வாறு நம்மை வெளிப்­ப­டுத்தி நம் தோற்­றத்தை முன்­வைக்­கி­றோம் என்­ப­தும் மிக முக்­கி­யம்.

நம்­மைப் பற்றி ஸ்டிரியோ­டைப் (Stereotype) எனும் மாறாத, ஒரே மாதி­ரி­யான எண்­ணங்­க­ளைத் தொட­ர­வி­டக்­கூ­டாது.

நான் உரு­வாக்­கிய இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தில் இந்­தி­யர்­களை முறை­யாக சித்­தி­ரிக்க வேண்­டும் என்ற பொறுப்­பு­ணர்­வு­டன் செயல்­

ப­டு­கி­றேன். மக்­க­ளி­டையே இணைப்­பு­களை உரு­வாக்­கு­வ­தன் மூலம் அவர்­கள் மத்­தி­யில் பரிவை வளர்ப்­பதை உறுதி செய்­கி­றேன். பரிவு, புரி­தல், கனி­வன்பு ஆகி­ய­வையே இன­வா­தத்தை ஒழிப்­ப­தற்­கான முதற்கட்டப் படி­கள்.

- ஸ்டேசி தான்யா ஷாமினி, 26,

நிறு­வ­னர், 'இந்­தி­யன்ஸ் ஆஃப் சிங்­கப்­பூர்' இன்ஸ்­ட­கி­ராம் பக்­கம்