புரிந்துகொண்ட பின் இருதரப்பிலும் மரியாதை கூடியது

புரிந்துகொண்ட பின் இருதரப்பிலும் மரியாதை கூடியது

1 mins read
b9446759-bf1c-4fd8-a9c2-22e3c4cd7da2
-

பதினாறு ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வசித்தேன். அப்போது நான் அங்கு என்னை சிறுபான்மை இனத்தவராக உணர்ந்ததில்லை. ஆனால் சில சமயங்களில் சிங்கப்பூரில் எனக்கு அந்த உணர்வு வந்திருக்கிறது.

ஆனால் என்னால் அனைவரிடமும் எளிதில் உரையாடமுடியும் என்பதால் அத்தகைய சூழ்நிலைகளைச் சமாளிக்க முடிகிறது.

என்னுடன் நட்பு கொண்ட இரண்டு ஆண்டு களுக்குப் பிறகுதான் என் சீன தோழி நான் தீபாவளி அல்லாது நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறேன் என்பதை உணர்ந்தார்.

என்னால் முடிந்த அளவிற்கு சிறு சிறு முயற்சிகள் மூலம் பிற சமயத்து நண்பர்களுக்கு என் சமயம் பற்றி விளக்குகிறேன்.

ரமலான் மாதத்தில் நோன்பு துறக்கும் நேரத்தில் என் நண்பர்களை வீட்டிற்கு அழைப்பேன். எவ்வித ஆடை அணிவது, எத்தனை மணிக்கு சாப்பிடுவோம், என்ன வகையான உணவைச் சாப்பிடுவோம் போன்ற தகவல்களை முன்பே சொல்வேன்.

அவர்களுக்குக் கண்டிப்பாக பல கேள்விகள் எழும். என் சமயத்தைப் புரிந்துகொள்ள விருப்பமும் தெரிவிப்பார்கள்.

அவர்களின் கேள்விகளுக்கு நான் அறிவியல் ரீதியாகவும் தர்க்கரீதியாகவும் பதில் அளிப்பதால் அவற்றை அவர்கள் நன்றாகப் புரிந்துகொண்டு விழிப்புணர்வை பெற்றார்கள். எங்களிடையே ஒருவருக்கு ஒருவர் மரியாதையும் கூடியது.

- ஹபிடா ஷா, 34, நிதி ஆலோசகர்