உரையாடல்களைத் தீர்வாகப் பயன்படுத்தினேன்

உரையாடல்களைத் தீர்வாகப் பயன்படுத்தினேன்

1 mins read
0144c645-cf8b-4545-a3d8-5929db068c3a
-

சிங்­கப்­பூர் தமிழ் பண்­பாட்டு மையத்­தின் உறுப்­பி­னர் நான். நமது இந்­திய சமூ­கத்­துக்­குள்­ளும் மற்ற சமூ­கத்­தி­ன­ரு­ட­னும் கலா­சா­ரப் பரி­மாற்­றங் களை ஊக்­கு­விக்­கும் நிகழ்­வு­களை எங்­கள் அமைப்பு ஏற்­பாடு செய்­கிறது.

தமிழ்ப் புத்­தாண்டு, நோன்­புப் பெரு­நாள், சீன புத்­தாண்டு குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­த­வும், பல்­வேறு இனங்­க­ளைப் பற்­றிய தவ­றான கருத்­து­களை திருத்­த­வும் உரை­யா­டல்­க­ளுக்கு மையம் ஏற்­பாடு செய்­தது.

நிகழ்ச்­சி­கள் ஆங்­கி­லத்­தில் நடை­பெற்­றன. எல்லா இனத்­த­வ­ரும் கலந்­து­கொண்­டார்­கள். இத்­த­கைய முயற்­சி­க­ளை­ ஊக்­கு­விப்­பது புரிந்­து­ணர்­வை­யும் நட்­பை­யும் வளர்க்க உத­வும்.

இன­வா­தம் தொடர்­பான அனு­ப­வம் எனக்­கும் ஏற்­பட்­டுள்­ளது. தேசிய சேவை­யின் போது சிலர் என்­னைப் பற்றி இன­வா­தக் கருத்­து

­க­ளைக் கூறி­னார்­கள். அவர்­க­ளி­டம் தனிப்­பட்ட முறை­யில் சென்று பேசி­னேன். அது தீர்­வாக அமைந்­தது. பொது­வாக, நாம் எவ்­வ­ளவு பாதிக்­கப்­ப­டு­கி­றோம் என்று தெரிந்­தால் மற்­ற­வர்­கள் அவர்­க­ளின் தவ­றைத் திருத்­திக்­கொள்­வார்­கள்.

- விஜயக்குமார் அருள் ஓஸ்வின், 28,

கணினி பொறியாளர்