கேலிப் பேச்சை நாமும் தவிர்க்க வேண்டும்

2 mins read
1442a163-158f-4e32-aed5-5e0a507d7885
தனபால் குமார் -

சிறு­பான்­மை­யி­னர் மட்டும்தான் இன­வா­தத்தை எதிர்­கொள்­கி­றார்­கள் என நாம் முடிவு செய்­து­வி­டக்­கூ­டாது. பள்­ளி­களில் மாண­வர்­கள் மற்ற மாண­வர்­க­ளின் தோற்­றம், நடை­யுடை, பண்­டி­கை­கள் பற்றி கேலி­யா­கப் பேசு­வார்­கள். இதைப் போன்ற பெரும்­பா­லான கேலிப் பேச்சு­களை வேடிக்கை என்று நினைத்து நாமும் பேசு­கி­றோம், அவர்­களும் பேசு­கி­றார்­கள்.

இதில் புண்­ப­டுத்­தும் நோக்­கமோ ஆழ­மான வெறுப்போ, விஷ­மத்­த­னமோ பெரும்­பா­லும் இருக்­காது. பல இனச் சூழ­லில் இத்­த­கைய பேச்­சு­கள் இயல்­பா­க நடக்கின்றன. இவை அளவுக்கு அதி­க­மாகி, புண்­ப­டுத்­தும் நோக்­கில் தொட­ரும்போதுதான் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே, இது­போன்ற பேச்­சு­களை அறவே தவிர்ப்­பது நல்­லது. பிற­ரி­டம் இருக்­கும் வேறு­பா­டு­களை புரிந்­து­கொள்­வது அவர்களுக்கு மதிப்­பு அளிப்பதற்கு உத­வும்.

தீபா­வளி என்­பது தமி­ழர்­க­ளின் புத்­தாண்டு இல்லை என்­பதை மற்ற இன மாண­வர்­க­ளுக்கு விளக்­கு­கி­றோம். அதே ­நே­ரத்­தில் சீனப் புத்­தாண்டு, லேண்­டர்ன் விழா, நோன்­புப் பெரு­நாள் போன்ற விழாக்­கள் பற்றி நாம் தெரிந்­து­கொள்ள வேண்­டும். அவ்விழாக்கள் பற்றி மேலும் தெரிந்­து­கொள்வதற்கு அது உத­வும்.

பள்­ளி­களில் இன­வாத அல்­லது சம­யப் பாகு­பாடு பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­ளும்­போது, கோபப்­பட்டு வாக்­கு­வா­தத்­தில் ஈடு­ப­டக்­கூ­டாது.

அதே நேரத்தில் பொறுத்­துப் போவது மேலும் மன உளைச்­சலை ஏற்­ப­டுத்­தும், அவ்­வாறு பேசு­ப­வர்­களை மேலும் பேசத் தூண்­டும். அத­னால் அதற்குத் தீர்வுகாண வழி தேட வேண்­டும்.

மன­நல ஆலோ­ச­கர்­களை தயங்­கா­மல் உடனே சென்று பார்க்க வேண்­டும். தமி­ழா­சி­ரி­யர்­கள், வகுப்­பா­சி­ரி­யர்­க­ளை­யும் நாட­லாம்.

சமூக ஊட­கங்­களில் வெளிப்­ப­டுத்­து­வ­தை­விட இவ்­வாறு உரிய ஆலோ­ச­னை­யைப் பெறு­வது நன்­மை­யாக அமை­யும்.

- தனபால் குமார், 51, தலைவர், சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம்