அதி­க­மான கலா­சார அர­வ­ணைப்பு வேண்­டும்

அதி­க­மான கலா­சார அர­வ­ணைப்பு வேண்­டும்

1 mins read
15a29e0b-3663-46a4-b943-619dea7943bb
ஸ்டேசி தான்யாஷாமினி -
multi-img1 of 2

இன­வா­தச் செயல்­க­ளைக் களைய மூன்று வழி­கள் உண்டு. கற்­பித்­தல், ஈடு­ப­டுத்­து­தல், தொடர்பு ஆகிய மூன்று படி­களில் சமூ­கத்­தில் பிணைப்பை வலுப்­ப­டுத்த முடி­யும் என்று நம்­பு­கி­றேன்.

எத்­த­னையோ கலா­சார சிறப்­பு­மிக்க விழாக்­களை வெவ்­வேறு சமய, இனம் சார்ந்த சமூ­கத் ­தி­னர் கொண்­டா­டு­கின்­ற­னர். அது குறித்த ஆழ்ந்த கல்வி முக்­கி­யம். சிலரது அறியாமையைப் போக்க அவர்களைப் பல வழிகளில் ஈடுபடுத்த வேண்டும். ஒரே இனத்­த­வ­ருக்­குள்­ளும் வெவ்­வேறு இனத்­த­வர் இடை­யி­லும் இன்­னும் அதி­க­மான கலா­சார அர­வ­ணைப்பு வேண்­டும்.

மேலும், இன­வா­தப் போக்­கைக் களைய உரை­யா­டல்­கள் மூலம் தொடர்­பு­களை மேம்­ப­டுத்­த­லாம். அதற்­கான தளங்­கள் உள்­ளன.

ஒன்­பீப்­பல்.எஸ்ஜி, ரோசஸ் ஆஃப் பீஸ், சம­யங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்க சங்­கம், இன, சமய நம்­பிக்கை வட்­டம் போன்ற அமைப்­பு­களில் ஏற்­பாடு செய்­யப்­படும் உரை­யா­டல்­களில் கலந்­து­கொள்­ள­லாம்.

உதா­ர­ணத்­துக்கு ரோசஸ் ஆஃப் பீஸ் அமைப்பு கடந்த 2018ஆம் ஆண்டு முதல் கிட்­டத்­தட்ட 30 இளம் தூதர்­க­ளுக்குப் பயிற்சி அளித்து வரு­கிறது. அது­போன்ற திட்­டங்­களில் இளை­யர்­கள் இணைந்து செய­லாற்­ற­லாம்.

- திரு முஹம்­மது இர்­‌‌‌ஷாத், 32, நிறுவனர்,

ரோசஸ் ஆஃப் பீஸ் சமூக நல்லிணக்க அமைப்­பு