கோபத்தைக் குறைத்தேன்; பொறுமை காத்தேன்

கோபத்தைக் குறைத்தேன்; பொறுமை காத்தேன்

1 mins read
6757e130-68ae-4051-bbfb-c85ecdf8f1ba
ஹபிடா ஷா -
multi-img1 of 2

முன்பு இன­வா­தத்­திற்கு எதி­ராக மிகவும் கோபத்­து­டன் எதிர்ப்புத் தெரிவிப்பேன். ஆனால் கோபத்தைவிட இச்­சம்­ப­வங்­களைப் பொறு­மை­

யு­டன் அணு­கி­னால் நம் பேச்சை மற்­ற­வர்­கள் கேட்­பார்­கள் என்று உணர்ந்­தேன்.

சிலர் இன­வாத வார்த்­தை­க­ளைக் கூறும்­போது அல்­லது இன­வாதச் செயல்­களில் ஈடுபடும்போது என்­னால் முடிந்த அள­வு அவர் ­க­ளின் தவற்றைப் பொறு­மை­யாக சுட்­டிக் காட்ட முயற்­சி செய்துள்ளேன்.

இனவாதம் மறைய கல்வி நிறு­வ­னங்­கள் பெற்­றோ­ரு­டன் ஒத்­து­ழைத்து இனம் குறித்த பட்­ட­றை­க­ளைத் தொடங்க வேண்­டும் என்பது என் விருப்பம். குழந்­தை­க­ளுக்கு இனத்­தைப் பற்றி எவ்­வாறு கற்றுத் தருவது என்­ப­தை­யும், இன­வா­தத்தை எதிர்கொண்ட குழந்­தை­க­ளுக்கு எவ்­வாறு ஆத­ர­வ­ளிப்­பது என்­பது பற்­றி­யும் பெற்­றோர்­க­ளுக்குக் கற்றுத்தர வேண்­டும்.

- ரிஷிக்கா ஞானமூர்த்தி, 19, மாணவி, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்