நம்பிக்கையான எண்ணங்களைப் பரப்ப பதில் அளித்தோம்

நம்பிக்கையான எண்ணங்களைப் பரப்ப பதில் அளித்தோம்

1 mins read
9a834fa5-c165-4649-9f58-55c71b3cfbee
ரிஷிக்கா ஞானமூர்த்தி -
multi-img1 of 2
Google News Preferred Icon

ஓர் இந்திய ஆடவரின் வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் ஒரு பெண்மணி சத்தமாக உலோக வட்டில் (gong) அடித்த காணொளிக் காட்சி அண்மையில் பரவலாகியது. இச்சம்பவத்திற்குப் பதிலளிக்க நினைத்தோம்.

நானும் என் நண்பரும் பறையையும் தவிலையும் வாசித்து அந்தப் பெண்ணின் உலோக வட்டு ஒலியை ஒன்றிணைத்து 'ரீமிக்ஸ்' இசையாக ஃபேஸ்புக்கில் பதிவேற்றினோம்.

பள்ளிப் பருவத்தில் இனவாதச் சம்பவங்களை எதிர்கொண்டிருக்கிறேன். அத்தகைய சம்பவங்களினால் ஏற்படக்கூடிய வலி சில சமயம் வாழ்நாள் முழுவதும் தொடரலாம். ஆகையால், பள்ளிகளில் இத்தகைய சம்பவங்கள் மேலும் நடக்காமல் இருக்க தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

நாம் இந்தியர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம் என்றாலும், இந்திய கலாசாரத்தைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு நன்கு தெரியும் என்றும் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

நம் இந்திய சமூகம் அந்த முயற்சிகளில் மீண்டும் ஒருங்கிணைய வேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

சீன சிங்க நடனம், மலாய் கொம்பாங் போன்ற கலைகளை நன்கு அறிந்த மக்களுக்கு, நாங்கள் செய்த 'ரீமிக்ஸ்' காணொளி மூலம் பறை, தவில் போன்ற இந்திய இசைக் கருவிகளை பயன்படுத்தும் முறையை விளக்கும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டோம்.

இந்திய கலாசாரத்தை பற்றி மக்களுக்கு கற்றுத்தருவதுடன் ஆக்ககரமான, நம்பிக்கையூட்டும் சிந்தனைகளைப் பரப்பும் முயற்சியாக அது இருந்தது.

அக்‌ஷ்ரா திரு, 33, இசைக் கல்வியாளர், டமாரு சிங்கப்பூர் பள்ளியின் நிறுவனர் (படத்தின் இடதுபக்கம்)