தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயண விவரம் பற்றி பொய்யுரைத்தவருக்கு மூன்று வாரச் சிறை

1 mins read
b8471749-b3e6-4ea0-8450-cd7e99c0c129
விஜயகுமார் ஸீ ஜோசப். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பயணத்துக்குப் பின் தனிமைப்படுத்திக் கொள்ளும் காலத்தை வேறு இடத்துக்கு பதில் வீட்டில் கழிக்க வேண்டும் என்று விரும்பியதால், பயணப் பற்றுறுதியில் பொய்த்தகவல் அளித்தவருக்கு மூன்று வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான நிறுவனத்தில் நில அளவாளராகப் பணியாற்றிய விஜயகுமார் ஸீ ஜோசப், 58, பணிநிமித்தமாக கடந்த ஆண்டு நவம்பரில் இந்தோனீசியா சென்று வந்தார்.

சிங்கப்பூர் திரும்புவதற்கு இரு நாட்களுக்கு முன், சேஃப்டிராவல் இணையத்தளத்தில் சிங்பாஸ் விவரத்தைப் பயன்படுத்தி, வேறு இடத்தில் தனிமையில் இருக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டார்.

அச்சமயத்தில் ஃபிஜி, ஃபின்லாந்து, இலங்கை உட்பட 7 நாடுகளுக்குச் சென்று வந்தவர்கள், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் தனிமை காலத்தைக் கழிக்க விரும்பவில்லை என்று குறிப்பிட அனுமதிக்கப்பட்டிருந்தது.

அதனால் ஏழு நாடுகளுக்கும் சென்று வந்ததாக பயணப் பற்றுறுதியில் தெரிவித்தார் விஜயகுமார். சிங்கப்பூர் வந்தபோது மீண்டும் அவர் குடிநுைழவுத் துறை அதிகாரிகளிடம் பொய்த் தகவல் அளித்து, பற்றுறுதியில் கையொப்பம் இட்டார்.

குற்றத்துக்காக தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு இன்று (ஜூன் 21) மூன்று வாரச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்