13,000 ஓட்டுநர்களுக்கு $200-$650 ரொக்கம்

13,000 ஓட்டுநர்களுக்கு $200-$650 ரொக்கம்

2 mins read
1e061615-9215-4801-91b4-979e7e088931
-

தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சு­டன் (என்­டி­யுசி) இணைந்த சங்­கங்­களில் உறுப்­பி­னர்­க­ளாக இருக்­கும் 'லிமொ­சின்', சிற்­றுந்து ஓட்­டு­நர்­களுக்­கும் விநி­யோக ஓட்­டு­நர்­களுக்­கும் ஒரு­முறை மட்­டும் $650 வரை ரொக்க வழங்குதொகை கிடைக்கும்.

பொரு­ளி­யல் மெது­வாக மீண்டு வரும் நிலை­யில் அறி­விக்­கப்­பட்­டு உள்ள நிவா­ர­ணத் தொகுப்­பின் ஒரு பகு­தி­யாக இந்த உதவி நட­வடிக்கை இடம்­பெ­று­கிறது.

தேசிய தனி­யார் வாடகை வாக­னங்­கள் சங்­கம் (NPHVA), தேசிய விநி­யோக வெற்­றி­யா­ளர்­கள் சங்­கம் (NDCA) ஆகி­ய­வற்­றின் உறுப்­பினர்­க­ளுக்கு இந்த நிதி­யா­த­ரவு கிடைக்­கும். இதன்­மூ­லம் கிட்­டத்­தட்ட 13,000 ஓட்­டு­நர்­கள் பலன்­ பெறுவர்.

இந்த வழங்­கு­தொ­கை­யைப் பெற, லிமோ­சின் கார் ஓட்­டு­நர்­களும் 13 பேர்­வரை அம­ரும் வசதி கொண்ட சிற்­றுந்து ஓட்­டு­நர்­களும் தேசிய தனி­யார் வாடகை வாக­னங்­கள் சங்­கத்­தின் சந்தா செலுத்தி வரும் உறுப்­பி­னர்­க­ளாக இருக்க வேண்­டும்; செல்­லத்­தக்க தொழில்­முறை உரி­மத்­தை­யும் கொண்­டி­ருக்க வேண்­டும்.

அது­போல, விநி­யோக ஓட்­டு­நர்­கள் தேசிய விநி­யோக வெற்­றி­யா­ளர்­கள் சங்­கத்­தின் சந்தா செலுத்தி வரும் உறுப்­பி­னர்­க­ளாக இருக்க வேண்­டும்; பெட்­ரோ­லில் இயங்­கும் வாக­னத்­தைப் பயன்­படுத்தி வர­வேண்­டும்.

இவ்­வாண்டு மார்ச் 30ஆம் தேதிக்­குள், தன்­னு­ரிமை ஓட்­டு­நர் (freelance driver) தொழில் மூல­மா­கவே அவர்­கள் தங்­க­ளது வரு­மா­னத்­தின் பெரும்­ப­கு­தியை ஈட்­டி இருக்க வேண்­டும். அவர்­கள் கொவிட்-19 ஓட்­டு­நர் நிவா­ரண நிதி­யைப் பெற்­றி­ருக்­கக்கூடாது.

அத்­து­டன், வரு­மா­னம், வாக­னம், வேலை நட­வ­டிக்கை, சுய­தொ­ழில் தகு­தி­நிலை போன்­ற­வற்­றுக்­கான சான்­றா­வ­ணங்­க­ளை­யும் அவர்­கள் வழங்க வேண்­டும்.

இந்த ரொக்க வழங்­கு­தொ­கை­யைப் பெறத் தகு­தி­யு­டை­ய­வர்­கள் ஜூலை 16ஆம் தேதிக்­குள் http://ufse.org.sg/Pages/reliefscheme.aspx என்ற இணை­யப்­பக்­கம் வழி­யாக விண்­ணப்­பிக்க வேண்­டும்.

டௌன்­ட­வுன் ஈஸ்ட்­டில் உள்ள பெகோ­னியா டெர­சில் அமைக்­கப்­பட்­டுள்ள தற்­கா­லிக முகப்­பிற்­குச் சென்று நேரி­லும் அவர்­கள் விண்­ணப்­பிக்­க­லாம். முன்­ப­திவு செய்­து­கொண்டு அங்கு செல்­ல­வேண்­டும்.

விண்­ணப்­பம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டதா இல்­லையா என்­பது குறித்து நான்கு முதல் ஆறு வாரங்­க­ளுக்­குள் அவர்­க­ளுக்­குத் தக­வல் தெரி­விக்­கப்­படும் என்று என்­டி­யுசி தெரி­வித்­துள்­ளது. விண்­ணப்­பம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டோர்க்கு, அதன்­பின் இரண்டு முதல் நான்கு வாரங்­களுக்­குள் ரொக்க உதவி கிடைக்­கும்.

நிதி­யு­தவி பெறத் தகு­தி­யி­ருந்­தும் மேற்­கு­றிப்­பிட்ட இரு சங்­கங்­களின் உறுப்­பி­னர்­க­ளாக இல்­லாத ஓட்­டு­நர்­கள், அச்­சங்­கங்­களில் ஏதே­னும் ஒன்­றில் உறுப்­பி­ன­ரா­கச் சேர்ந்து, அதன்­பின் இந்­தத் திட்­டத்­தின்­கீழ் நிதி­யு­தவி பெற விண்­ணப்­பிக்­க­லாம்.

சிற்­றுந்து, லிமொ­சின் ஓட்­டு­நர்­களுக்கு $650 ரொக்க உதவி கிட்­டும். பெட்­ரோல் அல்­லது கலப்­பின வாக­னத்­தைப் பயன்­ப­டுத்­தும் விநி­யோக ஓட்­டு­நர்­க­ளுக்கு 400 வெள்ளி­யும் மோட்­டார்­சைக்­கிள் மூலம் விநி­யோ­கத் தொழில் செய்­வோர்க்கு 250 வெள்­ளி­யும் வழங்­கப்­படும்.

அவர்­கள் இவ்­வாண்டு மார்ச் 1ஆம் தேதிக்­கு­முன் அச்­சங்­கங்­களின் உறுப்­பி­ன­ரா­கச் சேர்ந்­து இ­ருக்க வேண்­டும்.

மார்ச் 1க்குப் பிறகு உறுப்­பி­ன­ரான சிற்­றுந்து, லிமொ­சின் ஓட்­டு­நர்­க­ளுக்கு $660ம் விநி­யோக ஓட்டு­நர்­க­ளுக்கு $350ம் மோட்­டார்­சைக்­கிள் மூலம் விநி­யோ­கப் பணி­யில் ஈடு­ப­டு­வோர்க்கு $200ம் வழங்­கப்­படும்.