சமூகத்தில் 13 பேர் உட்பட 16 பேர் கொரோனாவால் பாதிப்பு

சமூகத்தில் 13 பேர் உட்பட 16 பேர் கொரோனாவால் பாதிப்பு

2 mins read
08d75b4c-3caa-470d-9404-6537abb83d14
-

சமூ­கத்­தில் 13 பேர் உட்­பட புதி­தாக 16 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டு இருக்கிறது.

சமூ­கத்­தில் பாதிக்­கப்­பட்ட அந்த 13 பேரில் எண்­மர், முன்­னர் கொரோனா தொற்­றி­யோ­ரு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­கள். எஞ்­சிய ஐவ­ரும் இப்­போ­தைக்­குத் தொடர்­பின்றி கொரோனா தொற்­றி­யோர் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்­ள­னர்.

வெளி­நாட்டு ஊழி­யர் விடு­தி­யில் புதி­தாக எவ­ரை­யும் கிருமி தொற்­ற­வில்லை.

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்த மூவ­ருக்­குத் தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது. அவர்­கள் இங்கு வந்­த­தும் வீட்­டி­லேயே இருப்­ப­தற்­கான கட்­டாய உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

முன்­ன­தாக, நேற்று முன்­தி­னம் 11 பேருக்­குக் கிரு­மித்­தொற்று உறு­தி­யா­னது.

அவர்­களில் நிதி ஆலோ­ச­கர், பல்­ம­ருத்­துவ உத­வி­யா­ளர், வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கப் பொறி­யா­ளர், பணி­ஓய்வு பெற்ற இரு­வர் என தொடர்­பில்­லா­மல் கொரோனா பாதிப்­புக்­குள்­ளான ஐவர் அடங்­கு­வர்.

இம்­மா­தம் 12ஆம் தேதிக்­குப் பிறகு, ஒரு நாளில் பதி­வான தொடர்­பில்­லாப் பாதிப்­பு­களில் இதுவே ஆக அதி­கம். 12ஆம் தேதி­யன்­றும் இப்­படி ஐவ­ரைத் தொடர்­பில்­லாத வகை­யில் கொரோனா தொற்­றி­யது.

அந்த ஐவ­ரில் ஆக இளை­யவர், ரெட்­ஹில் எம்­ஆர்டி நிலை­யத்­தில் உள்ள கியூ அண்ட் எம் பல்­ம­ருத்­துவ அறுவை சிகிச்சை மையத்­தில் பணி­யாற்­றும் 22 வயதுப் பெண்.

வேலை நேரத்தின்போது அவர் முழு­மை­யான தனி­ந­பர் பாது­காப்பு அங்கி அணிந்­தி­ருப்­பார் என்று சுகா­தார அமைச்சு குறிப்­பிட்­டது.

இத­னி­டையே, கடந்த சனிக்­கி­ழமை 70ஆக இருந்த புக்­கிட் மேரா வியூ உணவு நிலை­யக் கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­தில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை, மறு­நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை 73ஆக உயர்ந்­தது. புதி­தா­கத் தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட மூவ­ரும் ஏற்­கெ­னவே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­கள்.

சிங்­கப்­பூ­ரில் இது­வரை 62,430 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட நிலை­யில், அவர்­களில் 34 பேர் இறந்துவிட்­ட­னர். கிருமி தொற்­றி­யி­ருந்­த­போது வேறு உடல்­ந­லக் கோளா­று­க­ளால் 15 பேர் மாண்­டு­போ­யி­னர்.

நேற்று முன்­தின நில­வ­ரப்­படி, தீவிர சிகிச்­சைப் பிரி­வில் ஒரு­வர் உட்­பட 142 பேர் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

மேலும் 196 பேர் சமூ­கப் பரா­மரிப்பு வசிப்­பி­டங்­களில் இருந்­த­வாறு உடல்­ந­லம் தேறி வரு­கின்­றனர்.