இம்மாதம் 28ஆம் தேதி திங்கட்கிழமையில் இருந்து உள்நாட்டு சமரசத் தீர்வு, சிங்கப்பூர் அனைத்துலக வணிக நீதிமன்றத்திற்கு வரும் குறிப்பிட்ட சில வழக்குகள், அவை சார்ந்த சமரச நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு மூன்றாமவர் நிதியளிக்கும் முறை விரிவு படுத்தப்படுகிறது. இந்த முறையின்கீழ், ஒரு பூசலில் தொடர்பிராத ஒரு நிறுவனம், அப்பூசலில் தொடர்புடைய ஒரு தரப்புக்கு நிதி வழங்கலாம். கொவிட்-19 நோய்ப் பரவலின் போது, பூசல்கள் அதிகரித்து இருக்கலாம் என்றும் பல நிறுவனங்கள் நொடித்துப் போகும் நிலையை எதிர்நோக்கி இருக்கலாம் என்றும் சட்ட அமைச்சு ஓர் அறிக்கை வழியாக நேற்று தெரிவித்தது. இந்நிலையில், மூன்றாமவர் நிதியளிக்கும் முறையை விரிவுபடுத்தியிருப்பது, நிதிப் பிரச்சினையை எதிர்நோக்கும் நிறுவனங்களுக்கு அத்தகைய பூசல் கோரிக்கைகளுக்கு நிதி ஆதாரம் திரட்டும் ஒரு மாற்று வழியாக விளங்கும். இந்த நடவடிக்கை, அனைத்துலக வணிகப் பூசல் தீர்வு மையமாக சிங்கப்பூரின் நிலையை வலுப் படுத்தும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
மூன்றாமவர் நிதியளிப்பு முறை விரிவாக்கம்
1 mins read
-

