முன்னோடி, மெர்டேக்கா தலைமுறையினர் மெடிசேவில் $278 மி. நிரப்பப்படும்

முன்னோடி, மெர்டேக்கா தலைமுறையினர் மெடிசேவில் $278 மி. நிரப்பப்படும்

2 mins read
9a67f5c0-27f1-4249-bef0-368e16ab15e6
-

முன்­னோடி மற்­றும் மெர்­டேக்கா தலை­மு­றை­யைச் சேர்ந்த மூத்­தோ­ரின் மெடி­சேவ் கணக்­கு­களில் மொத்­தம் $278 மில்­லி­யன் மதிப்­பி­லான தொகை நிரப்­பப்­படும்.

இம்­மாத இறு­திக்­குள் அவர் களுக்கு கடி­தம் வழி இது­கு­றித்து தெரி­யப்­ப­டுத்­தப்­படும் என்­றும் ஜூலை­யில் அவர்­க­ளது மெடி­சேவ் கணக்­கு­களில் பணம் நிரப்­பப்­படும் என்­றும் நிதி அமைச்­சும் சுகா­தார அமைச்­சும் நேற்று வெளி­யிட்ட கூட்­ட­றிக்­கை­யில் தெரி­வித்­தன.

முன்­னோ­டித் தலை­மு­றை­யைச் சேர்ந்த மூத்­தோர் $250க்கும் $900க்கும் இடைப்­பட்ட தொகை­யைப் பெறு­வர்.

இவ்­வாண்டு 82 அல்­லது அதற்கு மேற்­பட்ட வய­து­டை­யோர், தங்­க­ளுக்கு ஏற்­கெ­னவே கடு­மை­யான மருத்­து­வப் பிரச்­சினை இருந்­தால் கூடு­தல் நிரப்­புத்­தொ­கை­யாக இவ்­வாண்டு முதல் 2025 வரை ஆண்­டிற்கு $50 முதல் $200 வரை­யி­லான தொகை­யைப் பெறு­வர்­.

அவர்­க­ளது மெடி­ஷீல்ட் லைஃப் காப்­பு­று­தித் திட்­டத்­திற்­கான சந்­தா­வைச் செலுத்த இது உத­வும்.

இவ்­வாண்டு முன்­னோ­டித் தலை­மு­றை­யி­ன­ருக்­கான மெடி­சேவ் நிரப்புத்­தொகை ஏறக்­கு­றைய $182 மில்­லி­யன் மதிப்­பி­லா­னது.

மெர்­டேக்கா தலை­மு­றை­யி­னர் ஒவ்­வொ­ரு­வ­ரும் $200 பெறு­வர். இவ்­வாண்டு அவர்­க­ளுக்­கான நிரப்­பு­தொ­கை­யின் மதிப்பு ஏறத்­தாழ $96 மில்­லி­யன் ஆகும்.

மூத்­தோ­ருக்­கான இந்­தத் தொகுப்­புத் திட்­டங்­கள் தொடங்கப்­பட்­ட­தி­லி­ருந்து முன்­னோ­டித் தலை­மு­றை­யைச் சேர்ந்த ஏறக்­கு­றைய 450,000 பேரும் மெர்­டேக்கா தலை­மு­றை­யைச் சேர்ந்த 500,000 பேரும் பல­ன­டைந்­துள்­ள­தாக அமைச்­சு­கள் தெரி­வித்­துள்­ளன.

65 மற்­றும் அதற்கு மேற்­பட்ட வய­து­டைய தகு­தி­பெ­றும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு வழங்­கப்­படும் வரு­டாந்­திர ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்டு-மெடி­சேவ் நிரப்­பு­தொ­கைக்கு மேலாக மூத்­தோர், மெர்­டேக்கா தலை­மு­றை­யி­ன­ருக்கு மேற்­கூ­றப்­பட்ட நிரப்பு­தொகை வழங்­கப்­படும்.

65 மற்­றும் அதற்கு மேற்­பட்ட வய­து­டைய ஏறத்­தாழ 575,000 சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­க­ளது மெடி­சேவ் கணக்­கு­களில் $450 வரை­யி­லான தொகையை ஜூலை 30ஆம் தேதி­யி­லி­ருந்து பெறு­வர் என்று அமைச்சுகள் தெரிவித்தன.