கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழல் வருங்கால நகரங்களை வேறுவிதமாகப் கற்பனை செய்து மறுஉருவாக்க அரிய, தலை முறைக்கு ஒரு முறை வரும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.
நகரங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவை தொடர்ந்து தேவைப்படும் என்றும் மக்களை ஈர்க்கும் என்றும் உலக நகரங்கள் உச்சநிலை மாநாட்டில் பேசிய அவர் கூறினார்.
செயல்திறன் மட்டுமல்லாது மீள்திறனும் கொண்ட வாழக்கூடிய, நீடித்த நிலைத்தன்மை மிக்க நகரங்களைக் கட்டுவதன் முக்கியத்துவத்தை கிருமிப்பரவல் மீண்டும் வலியுறுத்தி இருப்பதாகவும் திரு ஹெங் குறிப்பிட்டார்.
கிருமிப் பரவலுக்குப் பின்னரும் நகரமயமாக்கம் தொடரும் என்றார் துணைப் பிரதமர்.

