இழப்பீடு கோரிய பார்ட்டி லியானியின் விண்ணப்பம் தள்ளுபடி

இழப்பீடு கோரிய பார்ட்டி லியானியின் விண்ணப்பம் தள்ளுபடி

1 mins read
4e4a2cb9-4cec-45b0-b94d-b47e3a1a62b7
-
Google News Preferred Icon

தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திடமிருந்து 10,000 வெள்ளி இழப்பீடு கோரி

முன்னாள் வெளிநாட்டு ஊழியர் பார்ட்டி லியானி செய்திருந்த விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமது முன்னாள் முதலாளியிடம் இருந்து திருடியதாக பார்ட்டி லியானியின் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த வழக்கில் அவர் நிரபராதி என்று கடந்த ஆண்டு இதே உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

தம் மீதான வழக்கு அற்பத்தனமானது என்றோ எரிச்சலூட்டும் தன்மை வாய்ந்ததன் சாத்தியத்தை திருவாட்டி பார்ட்டியின் தரப்பு நிரூபிக்கத் தவறியதாக நீதிபதி சான் செங் ஓன் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 359 (3)ஆம் பிரிவின் கீழ் இழப்பீடு கோரிய முதல் நபர் திருவாட்டி பார்ட்டி.

வர்த்தகர் லியூ முன் லியோங்கிடமிருந்து $50,000 மதிப்புள்ள பொருட்களைத் திருடியதாக திருவாட்டி பார்ட்டிக்கு முதலில் 26 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் குற்றமற்றவர் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.