மன­நலனைப் பேண வழி­காட்­டும் யோகா

மன­நலனைப் பேண வழி­காட்­டும் யோகா

2 mins read
d0d90382-2351-4a83-8b39-5ee4e2973c39
சன்லவ் இல்லத்தைச் சேர்ந்த முதியவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். படம்: யோகா லயிப்­ஃப்­ரரி அமைப்பு -

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

நிச்­ச­ய­மற்ற தற்­போ­தைய கொவிட்-19 சூழ­லில் மனதை நிலை­ப­டுத்­திக் கொண்டு தெளி­வாக சிந்­திக்­கும் ஆற்­றல் முக்­கி­ய­மா­கி­யுள்­ளது.

இதனை உணர்ந்து தீவி­லுள்ள பல்­வேறு அமைப்­பு­கள் யோகா போன்ற பயிற்­சி­களை ஏற்­பாடு செய்து வரு­கின்­றன.

'யோகா­வு­டன் இருங்­கள், வீட்­டில் இருங்­கள்' என்ற கருப்­பொ­ரு­ளு­டன் இவ்­வாண்­டின் அனைத்­து­லக யோகா தினத்தை முன்­னிட்டு ஒரு வாரம் முழுக்க சிங்­கப்­பூர் இந்­தி­யத் தூத­ர­கம் கொண்­டாட்ட நிகழ்ச்­சி­க­ளுக்கு ஏற்­பா­டுச் செய்­தது.

கடந்த ஜூன் 14 தேதி முதல் அனைத்­து­லக யோகா தின­மான ஜூன் 21 வரை­யில், யோகா பயிற்­சி­யின் தொடர்­பாக 170க்கும் மேற்­பட்ட இணை­யத் தொடர்­கள், போட்­டி­கள், புதிர் அங்­கங்­கள் நடத்­தப்­பட்­டன.

தொடக்க நிகழ்ச்­சி­யாக கடந்த திங்­கள் 14ம் தேதி சன்­லவ் இல்­லத்­து­ட­னும் யோகா லயிப்­ஃப்­ரரி எனும் யோகா பயிற்சி அமைப்­பு­ட­னும் சேர்ந்து ஸூம் மெய்­நி­கர் சந்­திப்பு தளத்­தில் யோகா பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் சன்­லவ் இல்­ல­வா­சி­கள், ஊழி­யர்­கள், சன்­லவ் மூத்­தோர் நட­வ­டிக்கை நிலை­யத்­திற்கு வரும் முதி­ய­வர்­கள் ஆகி­யோர் என 300க்கும் மேற்­பட்­டோர் கலந்­து­கொண்­ட­னர். இருக்­கை­யில் அமர்ந்­த­வாறே அவர்­கள் 45 நிமிட பயிற்­சி­யில் ஈடு­பட்­ட­னர்.

இந்­நி­கழ்ச்­சி­யில் பங்­கு­பெற்று உரை­யாற்­றிய சிங்­கப்­பூ­ருக்­கான இந்­தி­யத் தூதர் திரு பெரி­ய­சாமி கும­ரன், அனை­வ­ரை­யும் கொண்­டாட்­டத்­தில் இணைக்­கும் நோக்­கில் பள்ளி மாண­வர்­கள், மூத்­தோர், உடல்­கு­றை­யுள்­ளோர், வெளி­நாட்டு ஊழி­யர்­கள் ஆகி­யோ­ருக்­கும் நிகழ்ச்­சி­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன என்­றார்.

"நம்மை சுற்றி மன­உ­ளைச்­சல் தரக்­கூ­டிய சம்­ப­வங்­கள் நிக­ழும்­போது, மனதை நிலைப் படுத்த யோகா பயிற்சி உத­வு­கின்­றது. வீட்­டில் பல மணி­நே­ரம் கணி­னித் திரை­க­ளின் முன் வேலை செய்­கை­யில், கழுத்து, முதுகு பிரச்­சி­னை­கள் வரு­கின்­றன. யோகா­வில் ஈடு­ப­டு­வ­தால் சிந்­தனை தெளி­வா­கிறது. உடல் புத்­து­ணர்­வை­யும் வளை­யும் ஆற்­ற­லை­யும் பெறு­கி­றன்­றது," என்று விளக்­கி­னார் யோகா லயிப்­ஃப்­ரரி அமைப்­பின் நிர்­வாகி ரிச்­சிகா பத்னி, 38.

சன்­லவ் மூத்­தோர் நட­வ­டிக்கை நிலை­யத்­திற்கு வரும் முதி­யோர் வாரத்­தில் ஒரு­மு­றை­யா­வது யோகா பயிற்­சி­களில் ஈடு­ப­டு­வ­தா­கக் கூறி­னார் சன்­லவ் இல்ல தலைமை திட்ட அதி­காரி திரு க.ராஜ­மோ­கன். தற்­போ­தைய கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளால் அவர்­கள் வீட்­டி­லி­ருந்து ஸூம் சந்­திப்பு தளம்­வழி பயிற்­சி­யில் இணை­கி­றார்­கள் என்று அவர் தெரி­வித்­தார்.

"கடந்த சில ஆண்­டு­க­ளாக அடிக்­கடி யோகா பயிற்­சி­யில் ஈடு­பட்­ட­தில் மன அழுத்­தம் குறைந்­துள்­ள­தாக உணர்­கி­றேன். கோபத்­தைக் கட்­டுப்படுத்த இப்­ப­யிற்சி உத­வு­கிறது," என்று கூறி­னார் மார்­சி­லிங் சாலை­யில் அமை ந்துள்ள சன்­லவ் மூத்­தோர் நட­வ­டிக்கை நிலை­யத்­திற்கு செல்­லும் 68 வயது திரு எஸ்.ராஜ­கு­மார்.