சமத்துவமின்மையை குறைப்பதில் கவனம் வேண்டும்

சமத்துவமின்மையை குறைப்பதில் கவனம் வேண்டும்

2 mins read
5edaa7dc-9944-4c05-b8ff-5c06ef9875b3
-

நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பில் அமைச்சர் இந்திராணி

பரு­வ­நிலை மாற்­றம், கொள்­ளை­நோய் போன்ற சூழல்­களை மட்­டுமே எதிர்­கொள்­ளும் வகை­யில் நாடு­கள் தங்­க­ளின் உள்­கட்டமைப்பை மேம்­ப­டுத்­துவது போதாது. அந்த உள்­கட்­ட­மைப்­பால் சமத்­து­வ­மின்மை குறைய வேண்­டும், சமூக மீள்­திறன் வலுப்­பெற வேண்­டும் என்­றார் பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா. 'நீடித்து நிலைக்­கக்­கூ­டிய, சம­மான மீள்­தி­ற­னில் முத­லீடு செய்­தல்' என்ற தலைப்பை ஒட்டி அமைச்­சர் நேற்று உலக நகர்­கள் மாநாட்­டில் பேசி­னார்.

எளி­தில் பாதிப்­ப­டை­யக்­கூ­டி­ய­வர்­களே, ஒரு நாட்­டில் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­க­ளின் தாக்­கத்­தைப் பெரும்­பா­லும் உண­ரும் நிலை­யில் உள்­ள­னர். அத­னால் உள்கட்­டமைப்பு மேம்­ப­டுத்­தப்­ப­டும்­போது சமத்­து­வ­மின்­மை­யைக் குறைக்­கும் வண்­ணம் அது அமைய வேண்­டும் என்­றார். மேலும், அடிப்­ப­டைத் தேவை­களை நிறை­வு­செய்­வ­தற்கு உள்­கட்­ட­மைப்பு முத­லீ­டு­கள் முக்­கி­யம் என்­றும் அவர் தெரி­வித்­தார். இத்­த­கைய முத­லீ­டு­களே பொரு­ளி­யல் மீட்­சிக்­கும் நீண்­ட­கால வளர்ச்­சிக்­கும் முக்­கிய உந்­து­தல் சக்­தி­யாக அமை­யும் என்­றார்.

உல­கில் கொவிட்-19 நெருக்­க­டி­யால் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டோர், போதிய சுகா­தார வசதி­ இல்­லாத சூழ­லில் வாழ்­ப­வர்­கள் என்­றார் அமைச்­சர். இத­னா­லேயே கிரு­மிப் பர­வல் மேலும் மோச­மடைந்­தது என்­றும் நிதி மற்­றும் தேசிய வளர்ச்சி இரண்­டாம் அமைச்­ச­ரா­க­வும் உள்ள குமாரி இந்­தி­ராணி குறிப்­பிட்­டார்.

பொதுப் போக்­கு­வ­ரத்து, சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, பூங்­காக்­கள் மற்­றும் பொழு­து­போக்கு வச­தி­கள், மின்­னி­லக்க மற்­றும் இணை­யப் பயன்­பாடு போன்­ற­வற்றை அடிப்­படை உள்­கட்­ட­மைப்பு அம்­சங்­கள் என்று சுட்­டிய அவர், இவற்றை நகர்­கள் புறக்­க­ணிக்­கக்­கூ­டாது என்­றார்.

"இவற்­றின் பயன்­பாட்டை அதி­கரிப்­பது, சமத்­து­வ­மின்மை நிலை­யைக் குறைப்­ப­தற்கு மிக முக்­கியம்," என்­றார். அத்­து­டன் இதன் தொடர்­பில் சிங்­கப்­பூர் எடுத்து வரும் முயற்­சி­க­ளைப் பற்­றி­யும் அவர் பேசி­னார். 2030ஆம் ஆண்­டுக்­குள் ஒவ்­வொரு வீட்­டுக்­கும் 10 நிமிட நடை­ தூரத்தில் ஒரு பூங்கா அமைந்­தி­ருக்க வேண்­டும் என்று அவர் தெரி­வித்­தார். அத்­து­டன் நாட­ள­வில் பொதுப் போக்­கு­வ­ரத்­துப் பயன்­பாட்டை மேம்­ப­டுத்த, ரயில் கட்­ட­மைப்பை 230 கிலோ­மீட்­ட­ரி­லி­ருந்து 360 கிலோ­மீட்­ட­ருக்கு நீட்­டிப்­ப­தை­யும் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரின் மூத்த குடி­மக்­களி­டையே மின்­னி­லக்­கத் திறனை ஊக்­கு­விக்­கும் திட்­டங்­கள் குறித்­தும் அவர் பேசி­யி­ருந்­தார். இதற்­கி­டையே நீடித்து நிலைக்­கக்­கூ­டிய, பசு­மை­யான எதிர்­காலத்­தில் முத­லீடு செய்­வ­தும் முக்­கி­யம் என்­றார் அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா.

ஈராண்­டுக்கு ஒரு முறை நடை­பெ­றும் இம்­மா­நாடு, கொவிட்-19 சூழல் கார­ணத்­தால் இவ்­வாண்டு இணை­யம் வழி நடந்­தது. அர­சாங்­கத் தலை­வர்­களும் தொழில்­து­றை­களும் ஒன்­று­கூடி நகர்ப்­பு­றச் சவால்­களுக்­குத் தீர்வு காண்­பது தொடர்­பில் கலந்­து­ரை­யா­டு­வர். நாளை மாநாடு முடி­வு­றும்.