வீவக தரை வீடு சாதனை அளவாக $1.268 மில்லியனுக்கு விற்பனை

வீவக தரை வீடு சாதனை அளவாக $1.268 மில்லியனுக்கு விற்பனை

1 mins read
75d7791c-13e4-4617-8369-96ed51138957
புளோக் 39 ஜாலான் பஹாகியாவில் அமைந்துள்ள இந்த இரு மாடி தரை வீடு $1.268 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

வாம்போ வட்டாரத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத் தரை வீடு ஒன்று சாதனை அளவாக $1.268 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டின் 99 ஆண்டுகால குத்தகையில் 49 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இதுவே ஆக அதிகமான விலைக்கு விற்கப்பட்டுள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடாகும்.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தி பினக்கல்@டக்ஸ்டனில் உள்ள ஐந்து அறை வீடு ஒன்று $1.258 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இவ்வாண்டில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு அதிக வீவக வீடுகள் ஒரு மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாக விற்கப்பட்டுள்ளன.

நேற்றைய (ஜூன் 21) நிலவரப்படி இவ்வாண்டில் இதுவரை குறைந்தது ஒரு மில்லியன் வெள்ளிக்கு 99 வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டுள்ளன.

இவற்றில் 12 வீடுகள் இம்மாதம் விற்பனை செய்யப்பட்டன.

2012ஆம் ஆண்டில் முதல்முறையாக வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடு ஒன்று குறைந்தது ஒரு மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டது.

இதுவரை மொத்தம் 401 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் குறைந்தது ஒரு மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்