டாக்சி ஓட்டுநரைத் தாக்கிய ஆடவருக்குச் சிறை, $2,000 அபராதம்

டாக்சி ஓட்டுநரைத் தாக்கிய ஆடவருக்குச் சிறை, $2,000 அபராதம்

1 mins read
684ac4f3-fee0-4351-bf18-0771d6370e9c
நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே காணப்பட்ட வினோத் ராஜ். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

விநியோக ஊழியரான வினோத் ராஜ், 31, சென்ற ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதியன்று தன் காதலியுடன் டாக்சி ஒன்றில் பயணம் செய்தார்.

ஆனால் பயணத்துக்கான கட்டணத்தைச் செலுத்த மறுத்ததுடன் 52 வயது டாக்சி ஓட்டுநரைப் பலமுறை குத்தினார், உதைத்தார்.

வினோத்துக்கு இன்று (ஜூன் 22) இரண்டு வாரச் சிறையும் $2,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

இதற்கு முன்பாக வேறொரு சம்பவத்தில் வினோத்தின் மனைவி உதவி கோரி போலிசாரை அழைத்தபோது அதிகாரிகளை நோக்கி வினோத் தகாத சொற்களால் திட்டியதாகவும் கூறப்பட்டது.

$10,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள வினோத், தண்டனையை நிறைவேற்ற இம்மாதம் 29ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.

குறிப்புச் சொற்கள்