முடுக்கிவிடப்படும் நடவடிக்கைகள்

முடுக்கிவிடப்படும் நடவடிக்கைகள்

2 mins read
07b1a2ee-bdda-4916-b612-119f1bc7aea9
புளோக் 89 ரெட்ஹில் குளோஸில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கொவிட்-19 பரிசோதனை நிலையத்தில், பாதிக்கப்பட்ட பேரங்காடியில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் அங்கு சென்ற வாடிக்கையாளர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ரெட்­ஹில் வட்­டா­ரத்­தில் உள்ள சமூக மைய­மான உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்­கான நட்­பார்ந்த வளா­கத்­தில் துப்­பு­ர­வுப் பணி­யா­ள­ரா­கப் பணி­பு­ரி­யும் ஒரு­வ­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது உறு­தி­யா­கி­யி­ருப்­பதை அடுத்து அங்கு உள்ள ஒரு கட்­ட­ட­மும் பொது இடங்­களும் சுத்­தம் செய்­யப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாதிக்­கப்­பட்ட ஊழி­யர் உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்­கான நட்­பார்ந்த வளா­கத்­தில் உள்ள அகா­டமி கட்­ட­டத்­தில் பணி­பு­ரிந்­த­வர் என்று அர­சாங்க அமைப்­பான எஸ்ஜி எனே­பல் அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று பதி­விட்­டது.

119 புக்­கிட் மேரா வியூ­வில் உள்ள புதிய கொவிட்-19 குழு­மத்­தில் பாதிக்­கப்­பட்­டுள்ள ஐவ­ரில் இந்த 63 வயது ஆட­வ­ரும் ஒரு­வர்.

உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்­கான நட்­பார்ந்த வளா­கத்தை எஸ்ஜி எனே­ப­லும் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சும் இணைந்து நிர்­

வ­கிக்­கின்­றன.

வளா­கத்­தின் 'நெஸ்ட்' கட்­ட­டத்­தில் உள்ள தக­வல், வாழக்­கைத் தொழில் நிலை­யம் நேற்று முதல் அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை மூடப்­படும். அகா­டமி கட்­ட­டத்­தில் உள்ள சில கடை­கள் இயங்­கும் நேரத்தில் மாற்றம் இருக்கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

என்­டி­யுசி ஃபேர்பி­ரைஸ், புரோ­ஃபெ­சர் புரோன் உண­வ­கம், சம்­சுவீ விநி­யோக, சேவை­கள் நிறு­வ­னம் ஆகி­யவை அவற்­றில் அடங்­கும். இந்­தக் கடை­க­ளுக்­குச் செல்­லத் திட்­டம் கொண்­டி­ருப்­போர் அவை இயங்­கும் நேரத்தை உறுதி செய்­து­விட்டு செல்ல வேண்­டும் என்று எஸ்ஜி எனே­பல் நினை­

வூட்­டி­யது.

அகா­டமி கட்­ட­டத்­தில் பயிற்சி வச­தி­களும் உள்­ளன.

ஆனால் பயிற்சி வகுப்­பு­கள் கடந்த மாதம் நடுப்­ப­கு­தி­யி­லி­ருந்து இணை­யம் மூலம் நடத்­தப்­ப­டு­

கின்­றன.

எஸ்ஜி எனே­ப­லின் சேவை தேவைப்­ப­டு­வோர் அந்த அமைப்­பு­டன் இணை­யம் மூலம் தொடர்­பு­ கொள்­ள­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எஸ்ஜி எனே­ப­லால் நிர்­வ­கிக்­கப்­படும் திட்­டங்­க­ளுக்­கும் சேவை­

க­ளுக்­கும் விண்­ணப்­பம் செய்ய விரும்­பு­வோர் அவற்­றுக்­கான படி­வங்­க­ளை­யும் ஆவ­ணங்­க­ளை­யும் சமர்ப்­பிக்க எஸ்ஜி எனே­பல் இணை­யப்­பக்­கத்­தில் உள்ள மின்­னஞ்­சல் முக­வ­ரி­யையும் மின்­னி­லக்­கச் சேவைத் தளத்­தை­யும் பயன்­ப­டுத்­த­லாம். வேலை தேடு­வோர் employment@sgenable.sg எனும் மின்­னஞ்­சல் முக­வ­ரி­யைப் பயன்­

ப­டுத்­த­லாம் அல்­லது அமைப்­பின் இணை­யப்­பக்­கத்­துக்­குச் செல்­ல­லாம்.

மற்ற திட்­டங்­கள் அல்­லது சேவை­கள் தொடர்­பான மேல் விவ­ரங்­க­ளுக்கு 1800-8585-885 எனும் தொலை­பேசி எண்­ணு­டன் தொடர்பு கொள்­ள­லாம் அல்­லது contactus@sgenable.sg எனும் மின்­னஞ்­சல் முக­வ­ரி­யைப் பயன்­ப­டுத்­த­லாம். மேல் விவ­ரங்­க­ளுக்கு எஸ்ஜி எனே­ப­லின் இணை­யத்­த­ளத்தை நாட­லாம்.

இதற்­கி­டையே, 166 புக்­கிட் மேரா சென்ட்­ர­லில் உள்ள என்­டி­யுசி ஃபேர்பி­ரைஸ் பேரங்­கா­டி­யின் ஊழி­யர்­க­ளுக்­கும் அங்கு சென்ற வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கும் கொவிட்-19 பரி­சோ­தனை நேற்று சுமு­க­மான முறை­யில் நடை­பெற்­ற­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

அந்­தப் பேரங்­கா­டிக்­குச் சென்ற சில­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டதை அடுத்து இந்தப்

பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது.

இதற்­காக புளோக் 125ஏ புக்­கிட் மேரா வியூ­வில் தற்­கா­லிக பரி­சோ­தனை நிலை­யம் அமைக்­கப்­பட்­டது.

இம்­மா­தம் 3ஆம் தேதி­யி­லி­ருந்து 21ஆம் தேதி வரை அந்­தப் பேரங்­கா­டிக்­குச் சென்­ற­வர்­க­ளுக்­கும் அங்கு பணி­பு­ரிந்த ஊழி­யர்­க­ளுக்­கும் மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது.

கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க இந்த முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.