புதிதாக 18 பேருக்கு கொவிட்-19; மேலும் ஓர் உயிரிழப்பு

புதிதாக 18 பேருக்கு கொவிட்-19; மேலும் ஓர் உயிரிழப்பு

1 mins read
8ddb5e5f-ec32-42aa-99f0-304f851b2bb9
-

நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி

சிங்­கப்­பூ­ரில் மேலும் 18 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

இதன்­மூ­லம் சிங்­கப்­பூ­ரில் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 62,448ஆக அதி­க­ரித்­துள்­ளது.

புதி­தா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள 18 பேரில் 15 பேருக்­குச் சமூக அள­வில் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான தங்­கு­வி­டு­தி­யில் புதி­தாக யாருக்­கும் பாதிப்பு ஏற்­ப­ட­வில்லை.

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்த மூவ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

அவர்­கள் சிங்­கப்­பூர் வந்­த­டைந்­த­தும் அவர்­க­ளுக்கு இல்­லத் தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு கூறி­யது.

இந்­நி­லை­யில், கொவிட்-19

கிரு­மித்­தொற்று கார­ண­மாக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று 44 வயது ஆட­வர் மர­ண­ம­டைந்­த­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

அவ­ரு­டன் சேர்த்து சிங்­கப்­பூ­ரில் கொரோனா கார­ண­மாக 35 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

மர­ண­ம­டைந்த 35வது நபர் கடந்த மாதம் 25ஆம் தேதி­யன்று அலெக்­சாண்ட்ரா மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார்.

அவ­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று இருப்பது மறு­நாள் உறுதி செய்­யப்­பட்­டது.

கொவிட்-19 தடுப்­பூசியை அவர் போட்­டுக்­கொள்­ள­வில்லை என்­றும் அவருக்கு நீரி­ழிவு நோய் இருந்­தது என்­றும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

மாண்ட ஆட­வ­ரின் குடும்­பத்­து­டன் அலெக்­சாண்ட்ரா மருத்­து­வ­மனை தொடர்­பு­கொண்டு அவர்­

க­ளுக்­குத் தேவை­யான உத­வி­

க­ளைச் செய்து வரு­வ­தா­க­வும் அமைச்சு கூறி­யது.