மின்னிலக்கப் பொருளியல் உடன்பாடுகளை வரைய சிங்கப்பூர், வியட்னாம் பணிக்குழுக்கள்

மின்னிலக்கப் பொருளியல் உடன்பாடுகளை வரைய சிங்கப்பூர், வியட்னாம் பணிக்குழுக்கள்

2 mins read
d40956fe-42b2-421c-b67e-4d532cb2650e
-

மின்­னி­லக்கப் பொரு­ளி­யல் தொடர்­பான இரு­த­ரப்பு உடன்­பா­டு­களை வரைய விரை­வில் கூட்டு பணிக்­கு­ழுக்­களை அமைக்க சிங்­கப்­பூ­ரும் வியட்­னா­மும் இணக்­கம் கண்­டுள்­ளன.

வியட்­னா­முக்கு வருகை மேற்­கொண்­டுள்ள சிங்­கப்­பூர் வெளி­

யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­

கி­ருஷ்­ண­னும் வியட்­னாம் வெளி­யு­றவு அமைச்­சர் புயி தான் சோனும் நேற்று முன்­தி­னம் சந்­தித்­த­னர்.

அப்­போது இரு நாடு­க­ளுக்கும் இடையே பாது­காப்­பான விமா­னப் பய­ணங்­களை மீண்­டும் தொடங்­கு ­வ­தற்கு ஏது­வாக, சுகா­தா­ரச் சான்­றி­த­ழுக்கு அங்­கீ­கா­ரம் அளிக்க இரு அமைச்­சர்­களும் பரஸ்­பர முறை­யில் இணக்­கி­னர் என்று சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சின் அறிக்கை தெரி­வித்­தது.

இரு நாடு­கள் ரீதி­யி­லும் ஆசி­யான் ரீதி­யி­லும் ஒத்­து­ழைப்பை மறு­உ­று­திப்­ப­டுத்­திக்கொண்ட இரு அமைச்­சர்­கள், மின்­னி­லக்க பொரு­ளி­யல், இணை­யப் பாது­காப்பு, தூய்­மை­யான எரி­சக்தி, நீடித்த நிலைத்­தன்மை மேம்­பாடு, அறி­வார்ந்த நக­ரங்­கள் ஆகிய புதிய துறை­களில் தங்­கள் ஒத்­து­ழைப்பை விரி­வு

­ப­டுத்த சம்­ம­தித்­த­னர்.

"அனைத்­து­லக அள­வி­லும் வட்­டார அள­வி­லும் மேம்­பா­டு­கள் பற்றி விவா­தித்த இரு அமைச்­சர்­கள், இந்த வட்­டா­ரத்­தில் ஆசி­யா­னின் மையத்­தன்­மை­யின் முக்­கி­யத்­து­வத்தை வலி­யு­றுத்­தி­னர்.

"மேலும் அதன் மூலம் ஆசி­யான் வட்­டா­ரத்­தில் அமை­தி­யும் நிலைத்­தன்­மை­யும் மேம்­பட வேண்­டும் என்று அவர்­கள் தெரி­வித்­த­னர்," என்று அமைச்­சின் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

டாக்­டர் விவி­ய­னும் திரு சோனும் 2021 முதல் 2023 வரை வியட்­னாம் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மூத்த அதி­கா­ரி­க­ளுக்­கான கல்வி வருகை மற்­றும் நிர்­வா­கக் கல்வி தொடர்­பான உடன்­பாட்­டைப் புதுப்­பித்­துக்­கொள்­ளும் ஆவ­ணங்­களில் கையெ­ழுத்­திட்­ட­னர்.

அதன் மூலம் வியட்­னாம் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மூத்த அதி­கா­ரி­கள் சிங்­கப்­பூ­ரில் நடத்­தப்­படும் பொது நிர்­வா­கம், நகர திட்­ட­மி­டு­தல், போக்­கு­வ­ரத்து நிர்­வா­கம், அனைத்­து­லக விவ­கா­ரங்­கள் ஆகி­யவை தொடர்­பி­லான நிர்­வா­கக் கல்வி பரி­மாற்­றங்­களில் பங்­கேற்­பார்­கள்.

இதற்கு முன், 2010, 2012, 2016 ஆகிய ஆண்­டு­களில் இந்த உடன்­பாட்­டின் புதுப்­பிப்­பு­கள் இடம்­பெற்­றன.

டாக்­டர் விவி­யன், வியட்­னாம் அதி­பர் நுயன் ஸுவான் புச், பிர­த­மர் பாம் மின் சின், வியட்­னா­மின் ஃபாதர்­லாண்ட் முன்­ன­ணி­யின் மத்­திய செயற்­கு­ழுத் தலை­வர் டோ வான் சிய­ன் ஆகியோரைச் சந்­தித்து பேசினார் என்று அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.